என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிஜிபி அலுவலகம்"
- 1000 சவரன் நகை கேட்டு துன்புறுத்துவதாக மனைவி ஸ்ருதி புகார்.
- எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தனின் மருமகள் ஸ்ருதி நேற்று கணவர் குடும்பத்தினர் மீது வரதட்சனை புகார் அளித்திருந்த நிலையில், இன்று கணவர் சதீஷ் குமார் டிஜிபி அலுவலகத்தில் ஸ்ருதிக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
1000 சவரன் நகை கேட்டு துன்புறுத்துவதாக மனைவி ஸ்ருதி புகார் அளித்திருந்த நிலையில் சதீஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அந்த புகாரில், "எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
தன்னிடம் பணத்தை பறிப்பதற்காகவே இதுபோன்ற பொய்யான புகாரை தனது மனைவி கொடுத்துள்ளார் என சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், "கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு தாங்கள் பிரிந்த நிலையில், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தன் மீது பொய்யான புகார் தெரிவித்து வரும் ஸ்ருதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் மனுவில் சதீஷ் குமார் கூறியுள்ளார்.