என் மலர்
நீங்கள் தேடியது "ஷாஹித் கபூர்"
- விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் இணைந்து நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது ஃபார்ஸி வெப் தொடர்.
- இத்தொடரே ஷாஹித் கபூர் நடித்த முதல் வெப் தொடராகும்.
விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் இணைந்து நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது ஃபார்ஸி வெப் தொடர். இத்தொடரை ராஜ் & டிகே இருவரும் இணைந்து இயக்கினர். இத்தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்தொடரே ஷாஹித் கபூர் நடித்த முதல் வெப் தொடராகும்.இத்தொடரே ஷாஹித் கபூர் நடித்த முதல் வெப் தொடராகும்.
இத்தொடரில் விஜய் சேதுபதி காவல் அதிகாரியாகவும், ஷாஹித் கபூர் மற்றும் அவரது நண்பரும் கள்ள நோட்டு அடித்து அதனை வியாபாரம் செய்யும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பர். முதல் சீசன் முடிவில் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இடையே சண்டை வலுக்கும் மேலும் கதையின் முக்கிய வில்லனான மன்சூர் தலாலை வைத்து முடியும், அடுத்த சீசனுக்கான தொடக்கத்தையும் அங்கு கொடுத்திருப்பர்.
இந்நிலையில் ஃபார்சி பாகம் சீசன் 2 பற்றிய தகவல் கிடைத்துள்ளது. ஃபார்ஸி 2 தொடரின் வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு நடுவில் ஃபார்ஸி சீசன் 2 வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ராஜ் மற்றும் டிகே தற்போது ராக்த் ப்ரம்மாந்த் வெப்தொடரை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
- ஷாஹித் கபூர் 2015-ல் மீரா ராஜ்புத்தை என்பவரை மணந்தார்.
- நான் எப்போதும் எனது அழகான மகளுக்கு தெரியாமல் மறைந்திருந்தே புகைப்பிடிப்பேன்.
பிரபல இந்தி நடிகர் ஷாஹித் கபூர் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியது குறித்து மனம் திறந்து பேசினார். அதில் அவர் கூறியதாவது:-
நான் எப்போதும் எனது அழகான மகளுக்கு தெரியாமல் மறைந்திருந்தே புகைப்பிடிப்பேன். இதுவே அப்பழக்கத்தை நான் கைவிட முக்கிய காரணமாக இருந்தது.

ஒருமுறை மகளுக்கு தெரியாமல் புகைபிடிக்கும் போது எவ்வளவுநாள் இப்படியே இருப்போம். இனி வாழ்க்கையில் சிகரெட்டை தொடவே கூடாது என முடிவு செய்தேன். இனி மகளிடம் இருந்து மறைக்க விரும்பாததால் அந்த புகைப்பழக்கத்தை கைவிட்டு விட்டேன் என்று ஷாஹித் கபூர் கூறினார்.

ஷாஹித் கபூர் 2015-ல் மீரா ராஜ்புத்தை என்பவரை மணந்தார். இவர்களுக்கு மிஷா (வயது7), ஜைன்(வயது4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஷாஹித் கபூர் நடிக்கும் புதிய பான் இந்தியா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
- புதிய படத்தை சச்சின் ரவி இயக்கி உள்ளார்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள பான்-இந்தியா படைப்பாக உருவாகி இருக்கும் படம் 'அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்'. இந்த படம், மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமனின் கதையை ஆராய்கிறது.
தற்போதைய காலகட்டத்தில் அஸ்வத்தாமன் நவீன சவால்களையும் வலிமைமிக்க எதிரிகளையும் எதிர்கொள்கிறார். இதை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை அதிரடி காட்சிகள் மற்றும் திருப்பங்களுடன் சொல்லும் படம் இது.

படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கடந்த காலமும் நிகழ் காலமும் மோதும் பிரம்மாண்ட களத்தை கண் முன்னே கொண்டு வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இப்படம் அமையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
பூஜா என்டர்டெயின்மென்ட் பேனரில் வாசு பாக்னானி, ஜக்கி பாக்னானி மற்றும் தீப்ஷிகா தேஷ்முக் ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் ஷாஹித் கபூர் நடித்துள்ளார். சச்சின் ரவி இயக்கத்தில் உருவாகி வரும் 'அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்', உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்