என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "கோபி சுதாகர்"
- பரிதாபங்கள் கோபி - சுதாகர் நடிக்கும்படத்திற்கு Oh God Beautiful என்று பெயரிட்டுள்ளனர்.
- இந்தப் படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.
யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். யூடியூப்-ஐ தாண்டி வெள்ளித்திரையில் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டு வந்தனர். அதன்படி பொது மக்களிடம் பணம் வசூலித்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டனர். இருவரின் முயற்சிக்கு அதிக தொகை கிடைத்த போதிலும், அந்தப் படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில், கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ஓ காட் பியூட்டிபுல் ( Oh God Beautiful ) என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.
முன்னதாக இந்தப் படம் துவங்கியதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்தப் படத்தின் பெயர் வெளியாகி உள்ள நிலையில், அடுத்தடுத்த தகவவல்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Presenting the title look of #OhGodBeautiful ❤️ #OGBTitle teaser ▶️ https://t.co/jaXxxtsUTX#Paridhabangal #GopiSudhakar #vishnuvijayan@Paridhabangal @AravindhrajaG @Actor__Sudhakar @DirVishnuvj @DOPshakthivel #Shreekarthik@SamRdx6 #JcJoe #ArunGowtham @vijayinfantart… pic.twitter.com/UMr3YxeMGD
— Parithabangal (@Parithabangal_) February 11, 2025
- பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- யூடியூப் சேனலில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாக உள்ளது.
டி.ஒ. கிரியேடிவ் லேப்ஸ், பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்கேலர் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் புதிய இணைய தொடரை இயக்குநர் ஷாகித் ஆனந்த் இயக்குகிறார். இதில் பரிதாபங்கள் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்டார்ட் அப் துறையின் பின்னணியில் உருவாகியிருக்கும் காமெடி டிராமா சீரிஸ் 'கோடியில் இருவர்'. வரும் பிப்ரவரி 25 முதல் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது. கோடியில் இருவர் சீரிசின் டிரையிலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இணையம் முழுக்க வைரலாக பரவி வரும் இந்த டிரைலர் யூடியூப் தளத்தில், டிரெண்டாகி வருகிறது.
ஐடி ஊழியர்கள், ஸ்டார்ட் அப் துவங்க ஆசைப்படும் இளைஞர்கள் என இன்றைய தலைமுறையினர் தங்கள் வாழ்வோடு எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ளும் வகையிலான திரைக்கதையுடன், நகைச்சுவை கலந்து, அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம், கலக்கலான சீரிசாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
இந்த சீரிசில் கோபி, சுதாகர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க அஜய் ரத்தினம், டிராவிட் செல்வம், செல்லா, விவேக், நித்யஸ்ரீ, ராம்குமார் அண்ணாச்சி, ஆல்பர்ட் அஜய், அஸ்வத் போபோ, அர்ஜுன் மனோகர் (ஓர்ஜுன்), வெட்டி பையன் வெங்கட் மற்றும் நிறைமதி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.