search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலையாளப் படம்"

    • கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
    • நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.

    தற்போதைய சினிமா சூழ்நிலையில் மற்ற அனைத்து மொழி சினிமாகளுக்கு இடையில் எப்போழுதும் மலையாள சினிமா தனித்து இருக்கும்.

    அவர்கள் இயக்கும் படங்கள் ஆகட்டும், அவர்கள் எடுக்கும் கதைகளம் ஆகட்டும் எப்பொழுதும் வித்தியாசமானவை.

    மலையாள சினிமாவின் கதைகளம் எப்போதும் மக்களின் பிரச்சனைகளையும், சமூதாய பிரச்சனைகளையும் அதிகமாக பேசக்கூடியவை.

    பெரும் பெரும் பொருட் செலவில் எடுக்கப்படும் பிற மொழி பல படங்களுக்கு போட்டி போடும் அளவில் எளிமையான படங்களை முந்நிறுத்தி வசூல்களை அள்ளும் திறன் கொண்டது மலையாள சினிமா. அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியாகிய பிரமயுகம்,மஞ்சும்மல் பாய்ஸ். ப்ரேமலு போன்ற படங்களே சாட்சி.

    இப்போது அதற்கு மேலும் ஒரு மகுடம் சூடும் விதமாக கேரளா அரசாங்கம் ஒரு முயற்சி எடுத்துள்ளது.கேரளா அரசாங்கம் இந்தியாவில் முதன் அரசாங்கத்திற்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்க உள்ளது.இதுவரை ஓடிடி தளங்கள் என்றால் பெருன்பான்மையாக இருப்பது அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃப்லிக்ஸ், zee 5,ஹாட் ஸ்டார்.ஆஹா போன்றவைகள்தான் .

    கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

    நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.

    சிஸ்பேஸ் ஓடிடி தளம் உருவாக்கிய நோக்கத்தைப் பற்றி செய்தியாளர்களிடம்"சிஸ்பேஸ் OTT துறையில் வளர்ந்து வரும் ஏற்றதாழ்வுகள் மற்றும் உள்ளடக்கத் தேர்வு மற்றும் பரப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் பலதரப்பட்ட சவால்களுக்கு ஒரு பிரதிபலிப்பாகும்" என்று கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (KSFDC) தலைவருமான ஷாஜி என் கருண் கூறினார்.

    சிஸ்பேஸ் ஓடிடி தளம் KSFDC என்ற மாநில திரைபட மேம்பாட்டு கழகத்தால் நிர்வகிக்க படும் எனவும்,மலையாள சினிமாவையும், மலையாள திரைத்துறையையும் மேம்படுத்த இந்த முயற்சி முதல் படியாக இருக்கும் எனவும்,இத்தளத்தில் எந்த படங்கள் இடம் பெற வேண்டும் என்பதை 60 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

    • இந்த திரைப்படம் கருப்பு வெள்ளையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • வரும் மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

    பிப்ரவரி மாதம் 15-ம் தேதி மம்மூட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் இயக்கத்தில், நைட் ஷிஃப்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளியானது பிரமயுகம் திரைப்படம்.

    இத்திரைப்படத்தில் மம்மூட்டியின் நடிப்பு மிகவும் அபாரமாக இருக்கிறது என்று அனைவரின் பாராட்டையும் பெற்றார். படத்தின் ஒளிப்பதிவும், காட்சி அமைப்பும், ஒலி வடிவமும் இத்திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதுவரை உலகளவில் 60 கோடி ரூபாயை வசூலித்துள்ளது பிரமயுகம்.

    கடந்த பல ஆண்டுகளாக நாம் திரைப்படங்களை முழு நீள வண்ண திரைபடங்களாவே பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த திரைப்படம் கருப்பு வெள்ளையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    திரையரங்குகளில் வெளியாகி மிகவும் வெற்றிகரமாக ஓடிய இத்திரைப்படம் இப்பொழுது வரும் மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

    • மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் இதுவரை 15 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் ஆகியுள்ளது.
    • அளவு கடந்த அன்பை பொழிந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. - இயக்குனர் சிதம்பரம்

    தமிழ் மக்களின் அன்புக்கு நன்றி: மஞ்சும்மல் இயக்குநர் நெகிழ்ச்சி

    கடந்த சில நாட்களாகவே தமிழ் நாட்டில் எந்த சமூக ஊடகங்களை திறந்தாலும் "கண்மணி அன்போடு காதலன்" என்ற பாடல் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

    மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் இதுவரை 15 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் ஆகியுள்ளது. இதுவரை மொத்த பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் மஞ்சும்மல் பாய்ஸ் 100 கோடியை தாண்டியுள்ளது. மலையாள சினிமாவில் வேகமாக 100 கோடி வசூல் செய்த படங்களில் மஞ்சும்மல் பாய்ஸ் முதலிடம் பெற்றுள்ளது.

    இரண்டு நாட்கள் முன்பு மஞ்சும்மல் பாய்ஸ் படக் குழுவினர் சென்னை வந்திருந்தனர். தமிழ் திரையுலக பிரபலங்களான கமல், விக்ரம், தனுஷ், சித்தார்த் போன்றவர்களிடம் படம் தொடர்பாக பாராட்டுப் பெற்று இருந்தனர்.

     

    அதற்கு பதில் அளிக்கும் விதமாக "அளவு கடந்த அன்பை பொழிந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக இத்திரைப்படம் வெற்றி பெறக் காரணமான தமிழ் ரசிகர்களுக்கு மிக்க நன்றி" என்று அப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

     

    • வசூல் ரீதியாகவும் மஞ்சும்மல் பாய்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
    • தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டு.

    மலையாளத்தில் கடந்த 22ம் தேதி அன்று மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாஸி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படம் தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும், வசூல் ரீதியாகவும் மஞ்சும்மல் பாய்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

    மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் உள்பட பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.

    இந்நிலையில், 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் இயக்குநர் சிதம்பரம் மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

    ×