search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவாசப்பயிற்சி"

    • மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான சக்திவாய்ந்த கருவி தியானம்.
    • ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும்.

    இன்றைய வாழ்க்கைச்சூழலில் மன அழுத்தம் தவிர்க்கமுடியாத விஷயமாக இருக்கிறது. அதனை திறம்பட நிர்வகிப்பது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மேம்படுத்தும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடவைத்து மனதுக்கு மறுமலர்ச்சியை பெற்றுத்தரும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் இவை..

    * மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான சக்திவாய்ந்த கருவி தியானம். இது மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க உதவும். ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும். முடியாதபட்சத்தில் சுவாசத்தில் கவனம் செலுத்தி ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியிட சில நிமிடங்களை ஒதுக்க வேண்டும்.

    * மன அழுத்தத்தை நிர்வகிக்க அன்பானவர்களின் ஆதரவு முக்கியமானது. வலுவான சமூக தொடர்பு கொண்டவர்களுக்கு மன அழுத்த ஹார்மோன்களின் அளவு குறைவாக இருக்கும். நேரில் சந்திப்பது, செல்போனில் பேசுவது, வீடியோவில் அரட்டை அடிப்பது என ஏதாவதொரு வகையில் உங்களுக்கு உண்மையாக இருப்பவர்களுடன் சில நிமிடங்களை செலவிடுவதும், உங்கள் மனதில் இருக்கும் பாரங்களை இறக்கி வைப்பதும் மன அழுத்தத்தை விரட்டி அடிக்கும். மனதுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்திக்கொடுக்கும். எனவே நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள்.

    * லாவெண்டர், சாமந்தி, சந்தனம் போன்ற வாசனைகள் அமைதியுடன் தொடர்புடையவை. இந்த எண்ணெய்களை சருமத்தில் தடவலாம். குளிக்கும் நீரில் சில துளிகள் சேர்க்கலாம்.

    * ஓவியம் தீட்டுவது, இசைக்கருவியை வாசிப்பது போன்ற செயல்பாடுகள் மன அழுத்தத்தை குறைக்கும். தினமும் இதற்கு முடியாத பட்சத்தில் வாரந்தோறும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

    * ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் செய்யும். இதயத் துடிப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும். 4-7-8 சுவாச பயிற்சியை முயற்சிக்கவும். அதாவது 4 விநாடிகள் மூச்சை உள்ளிழுக்கவும், 7 விநாடிகள் அப்படியே வைத்திருக்கவும், பின்பு 8 விநாடிகள் சுவாசத்தை வெளியேற்றவும்.

    * சிரிப்பு யோகா செய்வதும் பலன் தரும். ஆக்சிஜன் உட்கொள்ளலை அதிகரிக்கச்செய்து எண்டோர்பின்களை வெளியிடும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.

    * செல்லப்பிராணிகளை வளர்ப்பது, குறிப்பாக நாய்கள் வளர்ப்பது, அதனுடன் நேரம் செலவிடுவது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், மன அழுத்த ஹார்மோன்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும். தனிமை உணர்வையும் குறைக்கும். மகிழ்ச்சி உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும்.

    * டிஜிட்டல் திரைகள் மற்றும் சமூக ஊடகங்களை தொடர்ந்து பார்வையிடுவது மன அழுத்தம் மற்றும் பதற்றத்திற்கு வித்திடும். அதனை ஒதுக்கிவைத்துவிட்டு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை உங்களுக்காக ஒதுக்குங்கள். அது மனதை இதமாக்கும். மறுமலர்ச்சியையும், புத்துணர்வையும் அளிக்கும்.

    * தோட்டக்கலையில் ஈடுபடுவதும் மன அழுத்தத்தை குறைக்கும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செடிகளை நடுவது, வளர்ப்பது, அறுவடை செய்வது போன்றவற்றில் ஈடுபடுவது, தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மையை பெற்றுத்தரும். தினசரி அழுத்தங்களில் இருந்து விடுபட்டு இயற்கையுடன் இணைய வைக்கும்.

    • யோகா என்பதற்கு ஒன்றிணைதல் என்பது அர்த்தம்.
    • கிரியா என்பதற்கு உள்நிலை செயல்பாடு என்பது அர்த்தம்.

    யோகா என்பதற்கு ஒன்றிணைதல் என்பது அர்த்தம். யோகா செய்யும்போது நம் உடல், மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவை ஒன்றிணைந்து மன அழுத்தங்களை குறைத்து மனதில் அமைதி நிலவச்செய்யும். யோகாவில் கர்ம யோகா, ஞான யோகா, கிரியா யோகா, பக்தி யோகா என நான்கு வகை உள்ளன. இதில் கிரியா யோகா பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

    கிரியா என்பதற்கு உள்நிலை செயல்பாடு என்பது அர்த்தம். கிரியா யோகா செய்யும்போது உங்கள் உள்நிலை செயல்பாட்டை மட்டுமே உள்ளடக்கி செய்தலாகும். கிரியா யோகாவை மேற்கொள்ளும்போது ஆன்மீகப் பாதையில் நடப்பது சக்தி வாய்ந்தது. ஆனால் உங்கள் ஈடுபாடும், ஒழுக்கமும் அதில் அதிகம் தேவைப்படும். அவ்வளவு எளிதாக கிரியா பயிற்சி இருக்காது.

    ஆனால் இரக்கத்துடனும் பொறுமையுடனும் செய்தால், உங்கள் மனதின் உள்ஞானத்தை உண்மையிலேயே ஒளிரச் செய்யலாம். கிரியா யோகாவை மேற்கொள்ள எளிய முறைகளை கீழே கூடுத்துளோம். அவற்றை சிறந்த நிபுணரின் வழிகாட்டுதல் மூலமாக மேற்கொள்வது அவசியம்.

     கிரியா யோகா செய்யும் முறை:

    * முதலில் நின்றபடி, கைகளை ஒன்று சேர்த்து மார்பினை ஒட்டி வணங்கிய நிலையில் அரை வினாடிகள் கண்களை மூடி நிற்க வேண்டும்.

    * அதன் பிறகு, முட்டிக் கால் இட்டு, முன்புறமாக கைகளை ஒன்று சேர்த்து வணங்க வேண்டும். இந்நிலையில் இருந்தபடியே கால் பாதங்கள் இரண்டையும் மேலும் கீழும் மூன்று முறை அசைக்க வேண்டும்.

    * அடுத்து, கைகளை பக்கவாட்டில், வைத்து உள்ளங்கைகளை நெஞ்சுக்கு நேரே குவித்து இருக்குமாறு வணங்க வேண்டும். அந்நிலையில் இருந்தபடியே கால் பாதங்கள் இரண்டையும் மேலும் கீழும் மூன்று முறை அசைக்க வேண்டும்.

    * மீண்டும், கைகள் இரண்டையும் முன்புறமாக கொண்டு செல்ல வேண்டும். இந்நிலையில் இருந்தபடியே கால் பாதங்கள் இரண்டையும் மேலும் கீழும் மூன்று முறை அசைக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.

    * நின்றபடி, நமக்கு பிடித்த தெய்வத்தை மனதில் கொள்ள வேண்டும்.

    * மண்டியிடும் போது யோகா குருவினை மனதில் கொள்ள வேண்டும்.

    யோகாசனம் செய்வதற்கு முன்பாக, நாம் நம் உடலை எளிய பயிற்சிகள் மூலம் ஆயத்தப்படுத்துதல்

    * நம் கால்களை 'V' வடிவில் விரித்து நிற்க வேண்டும்.

    * கைகளை முன்புறமாக தோள்பட்டை அளவிற்கு உள்ளங்கைகளைச் சேர்த்து நீட்ட வேண்டும்.

    * பக்கவாட்டில், நம்முடைய உள்ளங்கைகள் பூமியை நோக்கி இருக்குமாறு விரித்து வைக்க வேண்டும்.

    * இவ்வாறு மேற்குறிப்பிட்ட நிலையில், பத்து எண்ணிக்கை மனதில் கொண்டு முன்புறமாகவும், பக்கவாட்டிலும் மாறி மாறி கைகளை மாற்றி, சாதாரண பயிற்சி செய்ய வேண்டும்.

    ×