என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லெனின் பாரதி"

    • அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார்
    • இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    Dev cinemas Pvt Ltd தயாரிப்பில், யோகிபாபு நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் பின்னணியில், ஒரு அழகான காதல் கதையுடன் புதிய படம் உருவாகிறது. தமிழ் புத்தாண்டையொட்டி, இப்படத்தின் படப்பிடிப்பு, அருள் முருகன் கோவிலில் எளிமையான பூஜையுடன், இனிதே துவங்கியது.

    மேற்குத் தொடர்ச்சி மலை பட இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா.ராஜ்மோகன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

    சென்னையில் இரும்புக்கடை தொழிலாளியான நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும், அவனது காதலுமாக இப்படம் உருவாகிறது. ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவம் தரும் வகையில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் கமர்சியல் படமாக இப்படம் உருவாகிறது.

    நகைச்சுவை நாயகன் யோகிபாபு, காதல் நாயகனாகவும், எமோஷனலாகவும் புதுமையான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    இப்படத்தில் யோகிபாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அனாமிகா மகி நாயகியாக அறிமுகமாகிறார். இயக்குநர் லெனின் பாரதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். காளி வெங்கட், அயலி மதன், பாவா லக்ஷ்மன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறன்றனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ரைட்டர், தண்டகாரண்யம் படங்களின் ஒளிப்பதிவாளர் பிரதீப் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோட், அமரன் பட கலை இயக்குநர் சேகர் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்கிறார்.

    சண்டைப்பயிற்சியாளர் ஓம் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் படங்களின் உடை வடிவமைப்பாளர் நட்ராஜ் உடைவடிவமைப்பு செய்கிறார்.

    படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    • கமல்ஹாசன் கண்டன பதிவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார்.
    • ஆராய வேண்டிய பொறுப்பு சினிமாக்காரர்களுக்கு இருக்கிறது.

    புதுச்சேரியில் கடந்த 2-ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்திகள் புதுச்சேரி அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில், புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம், ராஞ்சியில் வெளிநாட்டு பெண் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம், மங்களூருவில் பள்ளி மாணவி முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம், சென்னையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞசன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், போதை பொருள் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் என சமீபத்திய குற்ற சம்பவங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டன பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார்.

     


    எங்கே போகிறோம்? என்ற கேள்வியுடன் துவங்கிய இந்த பதிவுக்கு இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் தளத்தில் பதில் அளித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "'எங்கே போகிறோம்' என்று ஆராய்வதைப் போல்… கதாநாயக வழிபாட்டுச் சினிமாக்கள் மூலம் ஆணாதிக்கம், வன்முறை,போதை,வெற்றுப் பெருமை,வக்கிரம்,குரூரம் என இளம் உள்ளங்களில் விஷ விதைகளை விதைத்து.. "எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்" என்று ஆராய வேண்டிய பொறுப்பும் சினிமாக்காரர்களுக்கு இருக்கிறது..," என குறிப்பிட்டுள்ளார். 



    ×