என் மலர்
நீங்கள் தேடியது "மலையாள சினிமா"
- இப்படம் நிவின் பாலிக்கு மிகப் பெரிய கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- படம் வரும் மே1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான தி வொர்ல்ட் ஆஃப் கோபி லிரிக் வீடியோ நேற்று வெளியாகியது. அதைத்தொடர்ந்து படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி பிரபலங்களுள் நிவின் பாலியும் ஒருவர். சமீபத்தில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளியான வருஷங்களுக்கு சேஷம் படத்தில் நிவின் பாலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இவரின் கதாப்பாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து நிவின் பாலி தற்பொழுது மலையாளி ஃப்ரம் இந்தியா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் நிவின் பாலிக்கு மிகப் பெரிய கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். இதற்கு முன் பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்து மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்ற 'ஜன கன மன' திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
நிவின் பாலியுடன் அனஸ்வர ராஜன், தியான் ஸ்ரீனிவாசன், மஞ்சு பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நிவின் பாலி ஜூனியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படம் வரும் மே1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான தி வொர்ல்ட் ஆஃப் கோபி லிரிக் வீடியோ நேற்று வெளியாகியது. அதைத்தொடர்ந்து படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
படத்தின் டீசரை குறித்து படத்தின் இயக்குனரான டிஜோ ஜோஸ் ஆண்டனி அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'இப்படம் அனைத்து மலையாளிகளுக்கும் பிடிக்கும், ஒரு மலையாளியின் அன்றாட வாழ்வியலை சித்தரிக்கும் விதமாகதான் இப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆல்பரம்பில் கோபி, அவனுடைய வாழ்க்கை, அவன் வாழ்க்கையை மாற்றக் கூடிய சம்பவங்களை பற்றி பேசும் படமாக இது இருக்கும். உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் இத்திரைப்படம் வேலை இல்லாமல் திண்டாடும் இரண்டு கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும், அனைத்து மொழி மக்களும் படத்தை காண வர வேண்டும்." என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரம்மயுகம் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
- மமூட்டி மற்றும் கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர்.
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்மூட்டி. 1983 ஆம் ஆண்டு வெளியான 'விசா' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 'மௌனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
அதைத் தொடர்ந்து அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம், போன்ற படங்களில் நடித்தார்.
ராம் இயக்கத்தில் மம்மூட்டி மற்றும் அஞ்சலி இணைந்து 2018 ஆம் ஆண்டு வெளியான 'பேரன்பு' படத்தில் நடித்தனர். கடந்த ஆண்டு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம், கண்ணூர் ஸ்குவாட் மற்றும் சில மாதங்களுக்கு முன் பிரம்மயுகம் போன்ற வித்தியாசமான கதைக்களமுடைய படங்களைத் தேடி நடித்து வருகிறார். பிரம்மயுகம் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
அதைத் தொடர்ந்து அடுத்ததாக 'டர்போ' என்ற படத்தில் நடித்துள்ளார். மமூட்டி மற்றும் கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வைசாக் இயக்கி இருக்கிறார். வைசாக் இதற்கு முன் மோஹன்லாலை வைத்து புலிமுருகன் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.
மிதுன் மானுவேல் தாமஸ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். வரும் ஜூன் 13 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக முன்னர் படக்குழுவினர் அறிக்கைவிட்டனர்.
ஆனால் தற்பொழுது படம் வெளியாகும் தேதியை மாற்றியுள்ளனர். வரும் மே 23 ஆம் தேதி டர்போ திரைப்படம் வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் டர்போ மோட் ஆக்டிவேடட் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது.
- படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்தனர். கேரளாவின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர்.
கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி அவர் குணா படத்தில் நடக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியது. மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகில் மிக்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது.
படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது. படம் இன்று மே 5 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் அனைவரும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மோகன்லால் L360, லூசிஃபர் 2, எம்புரான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
- இந்நிலையில் மோகன்லால் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும்.
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். கடந்த ஜனவரி மாதம் லிஜொ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் நடித்தார் மோகன்லால். படம் வெளிவந்து மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து மோகன்லால் L360, லூசிஃபர் 2, எம்புரான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மோகன்லால் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்திற்கு 'பரோஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.
குழந்தைகளைக் கவரும் விதமாக உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார். 3டி-யில் உருவாகும் இந்தப் படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.
வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்தப் படம் என்கிறார்கள். இந்நிலையில், இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சில மாதங்களுக்கு முன் பிரம்மயுகம் போன்ற வித்தியாசமான கதைக்களமுடைய படங்களைத் தேடி நடித்து வருகிறார் மமூட்டி
- வரும் மே 23 ஆம் தேதி டர்போ திரைப்படம் வெளியாகவுள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்மூட்டி. 1983 ஆம் ஆண்டு வெளியான 'விசா' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 'மௌனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
ராம் இயக்கத்தில் மம்மூட்டி மற்றும் அஞ்சலி இணைந்து 2018 ஆம் ஆண்டு வெளியான 'பேரன்பு' படத்தில் நடித்தனர். கடந்த ஆண்டு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம், கண்ணூர் ஸ்குவாட் மற்றும் சில மாதங்களுக்கு முன் பிரம்மயுகம் போன்ற வித்தியாசமான கதைக்களமுடைய படங்களைத் தேடி நடித்து வருகிறார். பிரம்மயுகம் படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
அதைத் தொடர்ந்து அடுத்ததாக 'டர்போ' என்ற படத்தில் நடித்துள்ளார். மமூட்டி மற்றும் கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வைசாக் இயக்கி இருக்கிறார். வைசாக் இதற்கு முன் மோஹன்லாலை வைத்து புலிமுருகன் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். படத்தின் கதையை மிதுன் மானுவேல் தாமஸ் எழுதியுள்ளார் இதற்கு முன் பிரபல மலையாள திரைப்படமான அஞ்சாம் பதிரா மற்றும் ஆப்ரஹம் ஓஸ்லர் படங்களுக்கு கதையை எழுதியது குறிப்பிடத்தக்கது. சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர்,சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வரும் மே 23 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. பீஷ்ம பர்வம் படத்திற்கு பிறகு மமூட்டி ஒரு மாஸ் ஹீரோவாக நடித்து இருக்கிறார். கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி வில்லனாக இப்படத்தில் நடித்துள்ளார்.
டிரைலரின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமீபத்தில் வெளிவந்த ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.
- சமீபத்தில் வெளிவந்த ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பிரித்விராஜ் . சமீபத்தில் வெளிவந்த ஆடு ஜீவிதம் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். ஆடு ஜீவிதம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும்.
அதைத்தொடர்ந்து ப்ரித்விராஜ் குருவாயூர் அம்பல நடையில் திரைப்படத்தில் நடித்துள்ளார். விபின் தாஸ் இயக்கம் செய்யும் இப்படத்தில் பசில் ஜோசப், யோகி பாபு நிகிலா விமல், அனஸ்வரா ராஜன், ரேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு நீரஜ் ரெவி ஒளிப்பதிவு செய்துள்ளார். அங்கித் மேனன் இசை அமைத்துள்ளார். கதையை தீப்பு பிரதீப் எழுதியுள்ளார்.
விபின் தாஸ் இதற்கு முன் ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் குஞ்சிராமாயணம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவராவார்.
இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது. பிரித்விராஜ் முற்றிலும் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டிரைலர் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக இருப்பதினால் மக்கலிடையே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'எஸ்கே23' படத்தில் நடித்து வருகிறார்.
- சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார்.
அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுதடுத்த படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
அதைத்தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'எஸ்கே23' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் துப்பாக்கி படத்தின் வில்லனான வித்யுத் ஜம்வல் நடித்து வருகின்றனர்.
இப்படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். 150 கோடி ரூபாய் பொருட் செலவில் இப்படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. படம் இந்தாண்டு இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, ஏ.ஆர். முருகதாஸ் சல்மான் கானை வைத்து 'சிகந்தர்' என்ற பாலிவுட் படத்தை இயக்க உள்ளார். அதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளது.
இந்நிலையில் 'எஸ்கே23' படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இவர் இயக்கும் படங்களுக்கென தனிப்பட்ட ஒரு கதைக்களமும், ஸ்டைல் இருக்கும்.
- இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை நயன்தாரா இணைவதாக கூறப்படுகிறது.
காதல் , போலீஸ் கதைகளை எடுப்பதில் வல்லவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கும் படங்களுக்கென தனிப்பட்ட ஒரு கதைக்களமும், ஸ்டைல் இருக்கும். இவர் படத்தில் இடம்பெற்ற பல பாடல்கள் பயங்கர ஹிட்டானது. மின்னலே படத்தில் தொடங்கிய கௌதமின் திரைப்பயணம் என்றுமே ஏறுமுகம் தான். நடித்திருந்தார்.
கௌதம் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் ஜோஷ்வா இமை போல் காக்க. பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த இத்திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வௌியானது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில், வருண் நாயகனாக நடித்திருந்தார். இதேபோல, கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்திருந்த துருவ நட்சத்திரம் திரைப்படமும் நீண்ட நாட்களாக வணிக பிரச்சனையால் வெளியாகாமல் உள்ளது.
இந்நிலையில், அடுத்ததாக மலையாளப் பக்கம் திரும்பிய கௌதம் மேனன், மம்மூட்டியை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இப்படத்தை மம்மூட்டியே தயாரிக்கிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை நயன்தாரா இணைவதாக கூறப்படுகிறது. மேலும், வரும் ஜூன் 15- ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மமூட்டி மற்றும் ராஜ் பி செட்டி நடிப்பில் சமீபத்தில் டர்போ திரைப்படம் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுதடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
- ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'எஸ்கே23' படத்தில் நடித்து வருகிறார்.
அயலான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுதடுத்த படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
அதைத்தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'எஸ்கே23' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் துப்பாக்கி படத்தின் வில்லனான வித்யுத் ஜம்வல் நடித்து வருகின்றனர்.
இப்படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். 150 கோடி ரூபாய் பொருட் செலவில் இப்படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. படம் இந்தாண்டு இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் சென்னை மற்றும் இந்தியாவில் பிற மாநிலங்களில் படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வந்தது.
இந்நிலையில் படத்தின் மிகப் பெரிய அப்டேட்டை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவட்தாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படம் வெளியாகும் தேதி அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, ஏ.ஆர். முருகதாஸ் சல்மான் கானை வைத்து 'சிகந்தர்' என்ற பாலிவுட் படத்தை இயக்க உள்ளார். அதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக் ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
- அதிதி ஷங்கரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக் ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' படத்திலும் நடித்தார்.
தற்போது அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இந்நிலையில், அதிதி ஷங்கரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதிதி நடிக்கும் அடுத்தப் படத்தில் தனெக்கென குரல் பாணியிலும் நடிப்பிலும் அசத்தும் அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் இசை நிறைந்த காதல் கதை பின்னணியில் உருவாகவுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளார். இப்படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு இசையை பிரபல மலையாள இசையமைப்பாளரான ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கவுள்ளார்.
2022 ஆம் ஆண்டு வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரனவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஹிருதயம் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிதி சங்கர் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்து இப்படத்திலும் விஷ்ணுவர்தன் இயக்கும் நேசிப்பாயா திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். அர்ஜூன் தாஸ் நடிப்பில் சமீபத்தில் `ரசவாதி` திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘காதல் தி கோர்' படம் பெரிய வெற்றி பெற்றது.
- இந்த புகைப்படம் கொச்சி தர்பார் ஆர்ட் கேலரி சமீபத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.
மலையாள சூப்பர் ஸ்டாரான நடிகர் மம்முட்டி தமிழிலும் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'காதல் தி கோர்' படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் மம்முட்டி ஜோடியாக ஜோதிகா நடித்து இருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மம்முட்டியின் பிரம்மயுகம் படமும் வசூல் சாதனை நிகழ்த்தியது. சமீபத்தில் மம்மூட்டி மற்றும் கன்னட பிரபலமான ராஜ் பி ஷெட்டி இணைந்து டர்போ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார்.
சினிமாவை தாண்டி இன்னொரு புறம் மம்முட்டிக்கு புகைப்படங்கள் எடுப்பது பிடிக்கும். படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அங்குள்ள அழகான விஷயங்களை தனது கேமராவில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்வது உண்டு. அப்படி மம்முட்டி எடுத்த புகைப்படங்களில் இந்திய புல்புல் பறவையின் புகைப்படமும் ஒன்று. இந்த புகைப்படம் கொச்சி தர்பார் ஆர்ட் கேலரி சமீபத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது. பின்னர் மம்முட்டி எடுத்த புல்புல் பறவை புகைப்படத்தை ஏலம் போட்டனர்.
ஏலத்தின் ஆரம்ப விலையாக ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. பின் அந்த புகைப்படத்தை தொழில் அதிபரான அச்சு உல்லட்டில் [லீனா க்ரூப் ஆஃப் பிசினஸ்] ரூ.3 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.
இந்த புகைப்பட கண்காட்சி மறைந்த எழுத்தாளரான இந்துச்சூடன் சார்பாக நடைப்பெற்ற கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (வயது53).
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (வயது53). கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
1971-ம் ஆண்டு பிறந்த இவர், பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களான ஜெஸ்சி மற்றும் பிஜி விஸ்வம்பரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதன் மூலம் மலையாள திரையுலகில் கால்பதித்தார். அதன்பிறகு பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் கலாபவன் மணி, முகேஷ் மற்றும் ரம்பா நடித்த 'கபடி கபடி' திரைப்படத்தை இயக்கி சுதீர் போஸ் இயக்குனரானார். இந்த படத்தில் நாதிர்ஷா இசையமைப்பில் நடிகர் கலாபவன் மணி பாடிய 'மின்னாமினுங்கே' என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது. இதன் மூலம் சுதீர் போஸ் இயக்கிய 'கபடி கபடி' படம் கொண்டாடப்பட்டது.
இவருக்கு ப்ரீதா என்ற மனைவியும், மிதுன் என்ற மகனும், சவுபர்ணிகா என்ற மகளும் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவனந்தபுரம் பதிஞ்சரேனடா பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் தான் உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு மலையாள திரையுலக நடிகர்-நடிகைகள், திரைப்பட இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுதீர் போசின் இறுதிச்சடங்கு வருகிற 5-ந்தேதி நடை பெறும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.