என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர் லால்"
- மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியான 12 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது
- நடிகர் லால் தமிழில் சண்டைக்கோழி, கர்ணன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்
மலையாளத்தில் அண்மையில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியான 12 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மலையாள திரையுலகில் ரூ. 100 கோடி வசூல் செய்த நான்காவது படம் என்ற பெருமையை மஞ்சும்மல் பாய்ஸ் பெற்றுள்ளது.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் பிரபல நடிகர் லாலின் மகன் நடித்துள்ளார் என்கிற தகவல் வெளிவந்துள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் நண்பர்களின் குழுவில், சிஜு என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் லாலின் மகன் ஜீன் பால் லால் நடித்திருக்கிறார். ஜீன் பால் லால் இதுவரை தாடியுடன் தான் படங்களில் நடித்துள்ளார். மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்காக அவர் தாடியை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமில்லாமல், அந்த நண்பர்களின் குழுவில் சிக்சன் என்கிற பாத்திரத்தில் நடித்த நபர் லாலின் மருமகன் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது.
மலையாளத்தில் பிரபல நடிகராக உள்ள லால் தமிழிலும் சண்டைக்கோழி, கர்ணன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.