என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச பெண்கள் தினம்"

    • மார்ச் 8, பல நாடுகளில் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது
    • ஐ.நா. பொதுச்சபை மார்ச் 8 தேதியை சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது

    1914 மார்ச் 8 அன்று முதல்முதலாக ஜெர்மனியில் சர்வதேச பெண்கள் தினம் என கொண்டாடப்பட்டது. அந்த சந்திப்பில், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாக்குரிமை பெற பல வருடங்களாக நடைபெற்ற போராட்டங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடந்த கலந்துரையாடல்களில், மார்ச் 8 எனும் தேதியை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.


    1975ல் ஐக்கிய நாடுகளின் (UN) சபை, மார்ச் 8 அன்று சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடியது.

    1977ல் ஐ.நா. பொதுச்சபை (UN General Assembly) தனது உறுப்பினர் நாடுகளுக்கு மார்ச் 8 தேதியை அதிகாரபூர்வமாக சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது.

    2024 சர்வதேச மகளிர் தின கருப்பொருளாக, "பெண் இனத்தில் முதலீடு செய்யுங்கள் – வளர்ச்சியை துரிதப்படுத்துங்கள்" (Invest In Women: Accelerate Progress) என்றும் பிரச்சார கருப்பொருள் (campaign theme) "இணைப்பதை ஊக்குவியுங்கள்" (Inspire Inclusion) என்றும் ஐ.நா. அறிவித்தது.

    பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறாமல் இருப்பதையும், தன்னிறைவு காண்பதில் உள்ள சிக்கல்களையும், சவால்களையும் களையும் விதமாக இந்த கருப்பொருள் உருவாக்கப்பட்டது.

    அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பங்கேற்பதையும், முடிவுகளை எடுப்பதில் சமமான வாய்ப்பளிப்பதை ஊக்குவிப்பதன் மூலமும், ஒரு வலுவான சமுதாய கட்டமைப்பை நாம் உருவாக்க முடியும்.

    சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த அனைத்து அம்சங்களிலும் பெண்களின் சாதனைகள் இந்நாளில் பிரசாரம் செய்யப்படும்.


    சர்வதேச அளவில் அரசியலில் சிரிமாவோ பண்டாரநாயகே (இலங்கை), இந்திரா காந்தி (இந்தியா), பெனாசிர் பூட்டோ (பாகிஸ்தான்), ஷேக் ஹசினா (வங்காளம் தேசம்), மார்கரெட் தாட்சர் (இங்கிலாந்து) போன்ற பெரும் தலைவர்கள் பல போராட்டங்களை கடந்து வெற்றி பெற்றனர்.

    முதல்முதலாக ரசாயன துறையில் மேரி கியூரி, உலக புகழ் பெற்ற நோபல் பரிசு (Nobel Prize) வென்றதற்கு பிறகு 60க்கும் மேற்பட்ட பெண்கள் நோபல் பரிசு வென்றுள்ளனர்.


    முழுக்க முழுக்க அறிவு சார்ந்த போட்டி என கருதப்படும் சதுரங்க (Chess) விளையாட்டில் நோனா கப்ரின்டாஷ்வில்லி எனும் ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றதை தொடர்ந்து 41 பெண்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றுள்ளனர்.

    மருத்துவ துறையில் 1960ல் டாக்டர் நினா ப்ரான்வால்ட் முதல் முதலாக இருதய அறுவை சிகிச்சை செய்து புகழ் பெற்றார். அவரை தொடர்ந்து தற்போது வரை பல பெண்கள் மருத்துவ துறையின் பல பிரிவுகளிலும் வியத்தகு சாதனை புரிந்து வருகின்றனர்.

    ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என நாளுக்கு நாள் பெண்கள் நிரூபித்து வரும் நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்று, பெண்களின் ஆற்றலை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

    • மார்ச் 8-ந் தேதி ஒரு மாபெரும் பேரணியை பெண்கள் நடத்தினார்.
    • பெண்களின் முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக அறிவிப்பு

    சர்வதேச பெண்கள் தினம் இந்த வாரம் (மார்ச் 8-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த தினம் தோன்றியது, கொண்டாட்டத்தில் அல்ல, போராட்டத்தில்.

    பெண்கள் தினத்துக்கும், அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கத்துக்கும், ரஷியப் புரட்சி இயக்கத்துக்கும் பங்கு உண்டு என்றால் ஆச்சரியமாக இருக்கும்.

    1975-ம் ஆண்டுதான் இந்த நாளை சர்வதேச பெண்கள் தினமாக ஐ.நா. சபை அங்கீகரித்தது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த நாள் பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகளில் இருந்து வருகிறது.


    இந்த நாளின் வரலாறு தெரியுமா?

    மார்ச் 8-ந் தேதி ஒரு மாபெரும் பேரணியை பெண்கள் நடத்தினார். வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தியும், வாக்களிக்கும் உரிமை கோரியும் சுமார் 15 ஆயிரம் உழைக்கும் பெண்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

    இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி.

    இந்த நாளை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர். பெண்ணுரிமைப் போராளி கிளாரா ஜெட்கின்.

    டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் கிளாரா, அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டனர்.

    அதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டே 2011-ம் ஆண்டு நூறாவது சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

    ஆனால் 1975-ம் ஆண்டில்தான் ஐ.நா. சபை, மார்ச் 8-ந் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது.

    அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக் கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்துவருகிறது. இதன்படி ஐ.நா.சபை அறிவிப்புக்குப் பின் வந்த முதல் பெண்கள் தினத்தின் முழக்கம், 'சமத்துவத்தை யோசி, அறிவுபூர்வமாக கட்டியெழுப்பு, மாற்றத்துக்காக புதுமை யாக சிந்தி.

    சமூகம், அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக இந்த நாள் உருவெடுத்துள்ளது.

    ஆனால், பாலின பாகுபாட்டை எதிர்த்து உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள்தான் இந்த நாளின் பின்னணியில் இருக்கின்றன .

    முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது 1917-ஆண்டு, ரஷியாவில் போர் வேண் டாம். 'அமைதியும் ரொட்டியும்' தான் தேவை என்று வலியுறுத்தி மார்ச் 8-ந் தேதி பெண்கள் போராட்டத்தை தொடங்கினர். நான்குநாள்கள் நடந்த இந்த போராட்டம், சர்வ தேசமகளிர் தினம் என்ற கருத்துக்கு உறுதியான ஒரு வடிவத்தைக் கொடுத்தது.

    நான்கு நாள்கள் நீடித்த இந்த போராட்டம் கடைசியில் ரஷிய மன்னரான ஜார், அரியணை துறப்பதற்கு காரணமாக அமைந்தது. மன்னராட்சி முடிவுக்கு வந்த நிலை யில், அதற்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம், பெண்களுக்கு வாக்குரிமையும் அளித்தது.

    இந்த மாற்றம்தான், 1917-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த புகழ்பெற்ற ரஷியப் புரட்சிக்கு காரணமாக அமைந்தது. அப்படி புரட்சியின் பின்புலமாக இருந்த மகளிர் தினம், பெண்களின் பெருமை போற்றும் நாளாக உருவெடுத்துள்ளது.

    ×