என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர் அஜித்குமார்"
- துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
- சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், சினிமாவை தொடர்ந்து கார் பந்தயத்திலும் கலக்கி வருகிறார்.
அதன்படி இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது.
இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்ற 12வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் அணிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
- நடிகர் அஜித் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றம்.
- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அஜித் சென்னை திரும்பினார்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் காதுக்கும் மூளைக்கும் இடையேயான நரம்பில் சிறிய கட்டி இருந்தது. அதனை கண்டறிந்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அந்த வீக்கத்தை அரை மணி நேரத்தில் சரிசெய்து அகற்றினார்கள்.
பின்னர், நடிகர் அஜித் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார் விரைவில் குணம் பெற வேண்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- ஷாலினி அஜித்குமார் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்
- மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் "விடா முயற்சி" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அவர் சென்னை திரும்பினார். அஜித் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம்.
அந்த வகையில், கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 8 ஆம் தேதி சிகிச்சை முடித்து வீடு திரும்பினார் அஜித். அடுத்தநாள் அவர் மகன் ஆத்விக்கின் பள்ளி கூடத்தில் கால்பந்து விளையாடுவதை பார்க்க வந்து இருந்தார். அவர் மைதானத்தில் உட்கார்ந்து விளையாட்டை பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் ஷாலினி அஜித்குமார் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் அஜித் குமார் அவர் மகனான ஆத்விக்கிற்கு ஷூ கடையில் அமர்ந்து ஷூ மாட்டி விடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
'உங்களால் ஜெயிக்க முடியாது' என்று நம்மிடம் சொல்லக்கூடிய ஒரே ஒருவர் அது நாம் தான் " என்ற தலைப்பில் பதிவினை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
- அஜித் குமாரின் வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அஜித் குமாருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஜினி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என் அன்பான அஜித்குமாருக்கு வாழ்த்துகள். நீங்க சாதிச்சிட்டீங்க. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். லவ் யூ.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் அஜித்குமார் அடுத்ததாக 'தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' ரேஸில் பங்கேற்றுள்ளார்.
- தகுதி சுற்றில் 1.41 நிமிடத்தில் லேப்சை நடிகர் அஜித் குமார் நிறைவு செய்தார்.
துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் அடுத்ததாக 'தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' ரேஸில் பங்கேற்றுள்ளார்.
ஐரோப்பாவில் நடைபெறும் போர்ஷே ஸ்ப்ரிண்ட் தொடரின் தகுதி சுற்றில் 1.41 நிமிடத்தில் லேப்சை நடிகர் அஜித் குமார் நிறைவு செய்தார்.
இதன்மூலம், கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் தேர்வாகியுள்ளார்.
பந்தயத்தில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் குமார் போர்ச்சுக்கல் சென்றுள்ள நிலையில், கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் அஜித்குமார் அடுத்ததாக 'ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' ரேஸில் பங்கேற்றுள்ளார்.
- கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் தேர்வாகியுள்ளார்.
துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் அடுத்ததாக 'தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' ரேஸில் பங்கேற்றுள்ளார்.
ஐரோப்பாவில் நடைபெறும் போர்ஷே ஸ்ப்ரிண்ட் தொடரின் தகுதி சுற்றில் 1.41 நிமிடத்தில் லேப்சை நடிகர் அஜித் குமார் நிறைவு செய்தார். இதன்மூலம், கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் தேர்வாகியுள்ளார்.
தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025 ரேஸின்போது, "ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அஜித் தமிழில் பதில் அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், "எல்லாரும் ஆரோக்கியமா சந்தோசமா வாழுங்க. LOVE YOU ALL" என்று அஜித் தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது.
- நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி." இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற 6-ந்தேதி வெளியாகவுள்ளது.
முன்னதாக துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. இதனிடையே நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விவேகம் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய், அஜித் குறித்து உருக்கமாக பேசியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், "அஜித் அண்ணா எப்படி இருக்கீங்க? உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கவேண்டும். உங்கள் வழியைதான் நான் பின்பற்றி வருகிறேன். கடந்தமுறை நீங்கள் ரேஸில் பங்கேற்றபோது உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போய்விட்டது. அடுத்தமுறை எனக்கு போன் செய்தால் உங்களுக்காக விசில் அடித்து கொண்டாட நான் ஓடோடி வருவேன்" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.