என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிமா செய்தி"

    • தற்போது ’கிரிஷ் லைவ் இன் துபாய்’ என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.
    • நடிகர் விஜய் கையெழுதிட்ட அவரின் ஃபோனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

    பின்னணி பாடகரான கிரிஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகர்களில் ஒருவர். நடிகை சங்கீதாவின் கணவன் ஆவார்.

    தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான படங்களான வேட்டையாடு விளையாடு, உன்னாலே உன்னாலே, வேட்டைகாரன், வாரணம் ஆயிரம், என்றென்றும் புன்னகை, அயன் போன்ற படங்களில் பல ஹிட்டான பாடல்களை பாடியுள்ளார்.

    தற்போது 'கிரிஷ் லைவ் இன் துபாய்' என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.தற்போது 'கிரிஷ் லைவ் இன் துபாய்' என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.இந்நிலையில் அவரது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் கையெழுதிட்ட அவரின் ஃபோனின் புகைப்படத்தை வெளியிட்டு அத்துடன் 'லவ் யூ அண்ணா' #GOAT என பதிவிட்டுள்ளார்.

    நாகர்கோயிலிலுள்ள சிறு ஊரில் நடக்கும் புறா பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பைரி. அப்பாவை இழந்த தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என தாய் ஆசைப்படுகிறாள். ஆனால் தாயின் பேச்சை கேட்காமல் புறா பந்தயத்தில் ஈடுப்படுகிறான் நாயகன்.

    புறா பந்தயத்தில் இருக்கும் பிரச்சனைகளும் அதில் இருக்கும் விரோதம், துரோகத்தை பற்றி பேசுகிறது இந்த படம். ஜான் கிளாடி இப்படத்தை இயக்கி இருக்கிறார். ரமேஷ் ஆறுமுகம், மேகனா எலன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    சிவகார்த்திகேயன் நல்ல படங்களை பார்த்தால் அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டும் பழக்கமுடையவர். பிப்ரவரி மாதம் ரியோ ராஜ் நடித்து வெளியான் "ஜோ" திரைபடக்குழுவினரை அழைத்து பாராட்டினார்.

    இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று பைரி படக்குழுவினரை அழைத்து பாராட்டு தெரிவித்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் படக்குழுவினரிடம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     

     

    • அமரன் திரைப்படத்தை ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது
    • "எத பத்தியும் யோசிக்காதீங்க உங்களுக்கு நான் இருக்கேன். எனக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்க" என கூறினார்

    வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் சிவக்கார்த்திகேயன் முக்கிய பங்கு வகுக்கிறார். தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி ஆகியவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவரின் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷ்ன்ஸ் இருக்கிறது.

    சமீபத்தில் வெளியான அயலான் படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.குழந்தை ரசிர்கர்கள் சிவகார்த்திகேயனுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். அயலான் படத்தை தொடர்ந்து அவரின் 21-வது படமான அமரனை கமலஹாசன் தயாரிக்கிறார்.

    சாய் பல்லவி,புவன் அரோரா,ராஹுல் போஸ் போன்ற பல நட்சத்திரங்கள் இதில் நடித்துருக்கின்றனர். ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். ஜி வி பிரகாஷ் இப்படத்த்ற்கு இசையமைத்துள்ளார்.

    அமரன் படத்தில் சிவகார்த்திக்கேயன் ராணுவ கமாண்டோவாக நடித்து இருக்கிறார்.

    இதற்காக உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்றி கம்மோண்டோவின் தோற்றத்தில் கச்சிதமாக இருக்கிறார்.

    அமரன் திரைப்படத்தை ஓடிடி தளமான நெட்ஃப்லிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் படத்திற்க்கு நெட்ஃப்லிக்ஸ் கொடுத்த அதிகபட்ச தொகை இது. முன்னதாக மாவீரன் படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 33 கோடி ரூபாய் கொடுத்து டிஜிட்டல் ரைட்சை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,

    அதனால் இப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    இந்நிலையில் சிவகார்த்திகேயன் இன்று அவரது ரசிகர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் " எத பத்தியும் யோசிக்காதீங்க உங்களுக்கு நான் இருக்கேன். எனக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்க. என் சினிமா வாழ்க்கை ஸ்டார்ட் பண்ணதுல இருந்து இப்போ வரைக்கும் நிறைய பிரச்சனை, வலி இருந்திருக்கு சிலது உங்களுக்கு தெரியும் சிலது தெரியாது. பிராப்ளம் ஷேர் பண்ண அப்பா இல்ல சப்போர்ட் பண்ண அண்ணனும் இல்ல. ஆனா இப்போ என் ஃபேன்சான ப்ரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் நீங்க இருந்தீங்க இருப்பீங்க" என மன நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    பின் சந்திப்பை முடித்து அங்கு இருந்து கிளம்பும் போது ரசிகர்களைப் பார்த்து சாப்ட்டீங்களா என்று கேடு விட்டுச் சென்றார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை இயக்கியதில் ஹெச்.வினோத் ஒருவர்
    • இந்தியில் அமிதா பச்சன் நடிப்பில் வெளிவந்த ’பிங்க்’படத்தை தமிழில் நடிகர் அஜித்தை வைத்து இயக்கினார் வினோத்.

    நடிகர் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை இயக்கியதில் ஹெச்.வினோத் ஒருவர். வினோத் 2014 ல் வெளியான சதுரங்க வேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சதுரங்க வேட்டை திரைப்படம் மக்களால் கொண்டாடப்பட்டது. 2014-ல் வெளியான திரைப்படங்களில் 'சதுரங்க வேட்டை' ஒரு புது விதமான கதை பாணியுடன் வெளிவந்தது. சூதாட்டம், மக்களை எப்படி நூதன முறையில் ஏமாற்றுகிறார்கள் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.

    இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. பின் 2017-ல் கார்த்தியை வைத்து 'தீரன் அதிகாரம் ஒன்று'படத்தை இயக்கினார். கார்த்தியின் திரையுலக பயணத்தில் பேர் சொல்லும் படமாக இது அமைந்தது. கார்த்தி ஒரு போலீஸ் அதிகாரியாக திறம்பட நடித்திருப்பார்.

    இந்தியில் அமிதா பச்சன் நடிப்பில் வெளிவந்த 'பிங்க்'படத்தை தமிழில் நடிகர் அஜித்தை வைத்து இயக்கினார் வினோத்.

    2022-ஆம் ஆண்டு அஜித்-தை வைத்து வலிமை படத்தை இயக்கினார். 2023-ல் மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கினார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன் போன்ற பலர் நடித்திருந்தனர். போனி கபூர் இப்படத்தை தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்தார். வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் அள்ளியது. அஜித் ரசிகர்களால் பெருமளவு கொண்டாடப்பட்டது. இந்நிலையில் வினோத் அடுத்ததாக நடிகர் விஜயை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவர் பங்குபெற்ற நேர்காணலில் "என்னோட முதல் படத்த தவிர நான் யாரிடமும் முழு கதையை சொன்னது கிடையாது, விஜய் சாருக்கு கதை சொல்லும்போது மட்டும்தான் முழு கதைய படிச்சு காட்டினேன்"என்று அவர் கூறியுள்ளார். இதை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நடிகர் விஜய் நேற்று தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு ரூபாய் 1 கோடி நிதி வழங்கினார்.
    • நடிகர் விஷால் இன்று அவரை நேரில் காண சென்றார்.

    தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள சமீபத்தில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகர் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் அதைப் பெற்றுக் கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நேற்று தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு ரூபாய் 1 கோடி நிதி வழங்கினார். அதற்கு நடிகர் சங்கத்தின் சார்பாக நேற்று நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு நன்றி கூறுவதற்காக தென்னிந்திய பொதுச்செயலாளர் பதவியில் உள்ள நடிகர் விஷால் இன்று அவரை நேரில் காண சென்றார்.

    "நன்றி என்பது இரண்டு வார்த்தைகளைக் குறிக்கிறது, ஆனால் ஒரு நபர் தனது இதயத்திலிருந்து அதைச் செய்தால் அதற்கு நிறைய அர்த்தம். நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்கு ஒரு கோடி நன்கொடை அளித்ததற்காக எனக்கு பிடித்த நடிகர் தளபதி விஜய் அண்ணனைப் பற்றி பேசுகிறேன். ஆம், உங்கள் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம். இப்பொழுது அதை சீக்கிரம் நடக்கும்படி எங்களை தூண்டிவிட்டுள்ளீர்கள் . " நன்றிநண்பா " என்று நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    • உலக அளவில் 'பாக்ஸ் ஆபிஸ்' கலெக்‌ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியுள்ளது.
    • மார்ச் 15 ஆம் தேதி இப்படம் தமிழ்நாடு திரையரங்களில் வெளியாகவுள்ளது.

    பிப்ரவரி 9 ஆம் தேதி மலையாளத்தில் வெளியான படம் 'ப்ரேமலு'. இந்த படம் வெளியான சில வாரங்களில் மக்கள் மனதை வென்றது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கி, விஷ்ணுவிஜய் இசையமைத்துள்ளார். மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மலையாள சினிமாவின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து மார்ச் 8 ஆம் தேதி வெளியிட்டனர். தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல திரையரங்குகளில் இன்றும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டு இருக்கிறது. உலக அளவில் 'பாக்ஸ் ஆபிஸ்' கலெக்ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியுள்ளது.

    இந்த வெற்றியைத் தொடர்ந்து ப்ரேமலு தமிழ் மொழியிலும் டப் செய்து வெளியாகவுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி இப்படம் தமிழ்நாடு திரையரங்களில் வெளியாகவுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தமிழில் வெளியிடுகிறது.

    மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் மொழியிலும் ப்ரேமலு படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஷாலினி அஜித்குமார் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்
    • மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார்.

    மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் "விடா முயற்சி" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அவர் சென்னை திரும்பினார். அஜித் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம்.

    அந்த வகையில், கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 8 ஆம் தேதி சிகிச்சை முடித்து வீடு திரும்பினார் அஜித். அடுத்தநாள் அவர் மகன் ஆத்விக்கின் பள்ளி கூடத்தில் கால்பந்து விளையாடுவதை பார்க்க வந்து இருந்தார். அவர் மைதானத்தில் உட்கார்ந்து விளையாட்டை பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில் ஷாலினி அஜித்குமார் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் அஜித் குமார் அவர் மகனான ஆத்விக்கிற்கு ஷூ கடையில் அமர்ந்து ஷூ மாட்டி விடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

    'உங்களால் ஜெயிக்க முடியாது' என்று நம்மிடம் சொல்லக்கூடிய ஒரே ஒருவர் அது நாம் தான் " என்ற தலைப்பில் பதிவினை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • விஜய் இத்திரைப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார்.
    • நடிகர் விஜய் இன்று கோட் பட ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ளார்.

    இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடிக்கும் கோட் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் சைன்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வருவதாக தெரிகிறது. விஜய் இத்திரைப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். ஒன்று முதுமை தோற்றமும் மற்றொன்று இளமை தோற்றம் ஆகும்.

    நடிகர் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி என்று பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். மே மாதம் படத்தை வெளியிடுவதற்காக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் திரிஷா கோட் படத்தில் நடிக்கவுள்ளார். இரண்டு நாட்கள் இப்படத்திற்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் இன்று கோட் பட ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ளார்.

    2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்திற்கு அடுத்து நடிகை திரிஷா மீண்டும் வெங்கட் பிரபு படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




     


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்
    • தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர்

    பிரபல நடிகர் அஜித் - திரிஷா நடிக்கும் புதிய படம் விடாமுயற்சி. இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    இந்நிலையில்அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அப்படத்தின் டைட்டில் இப்பொழுது அதிகாரப்பூர்வமாக படக்குழுவுனரிடம் இருந்து வெளியிடப் பட்டுள்ளது. படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிட்டுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிடப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் சமூக வலைத்தளங்களில் படத்தின் டைட்டில் போஸ்டரை பகிர்ந்து வருகின்றனர்.




     


    • ஸ்பை ஆக்ஷன் படமாக இப்படம் அமைந்துள்ளது.
    • ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மனோஜ் பரமஹம்சா, கதிர் ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டார்

    இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படம் துருவ நட்சத்திரம். நடிகர் விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன் , ராதிகா, சிம்ரன் போன்ற பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு இப்படத்தின் பேச்சு வார்த்தை நடந்து 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு வேலைகளை துவங்கினர். முதலில் இப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிப்பதாக இருந்தது. பின்னர் நடிகர் விக்ரம் தேர்வு செய்யப்பட்டார்.

     

    ஜான் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். ஸ்பை ஆக்ஷன் படமாக இப்படம் அமைந்துள்ளது. விக்ரம் 'பேஸ்மண்ட்' என அவருக்கென் ஒரு தனி அதிரடிப் படையை வைத்துள்ளார். அந்த படையை வைத்து தீவிரவாதி கும்பல்களை ரகசியமாக தாக்குகிறார் அரசாங்கத்திற்கு தெரியாமல் என்பதே கதைக்களம்.

     

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மனோஜ் பரமஹம்சா, கதிர் ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டார். போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்துக் கொண்டு இருக்கும் வேலையில் கோவிட் 19 வந்ததால் பட வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. 2023 ஆண்டு நவம்பர் மாதம் படத்தை வெளியிடத்திட்டமிட்டனர் ஆனால் படத்தை அந்த தேதியில் வெளியிட முடியவில்லை. நீடித்த நிதி மற்றும் சட்டச் சிக்கல்கள் காரணமாக, படம் வெளிவராமல் உள்ளது.

     

    இந்நிலையில் மார்ச் 29 ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதிகாரப் பூர்வ தகவல் விரைவில் படக்குழுவினரிடம் இருந்து எதிர்பார்க்கப் படுகிறது.

    இம்முறையாவது படம் வெளியாகும் என ரசிகர்கள் மிக எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்"
    • நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்

    அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்". இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் நேற்று வெளியிட்டனர். T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

    ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள்,  அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன். அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில்நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார்.  பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக பி.வி.ஆர் பாஸ்போர்ட் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • பி.வி.ஆர் பாஸ்போர்ட்டின் மூலம் மக்கள் மாதத்திற்கு 4 படங்கள் பார்க்கலாம்

    சினிமாவை அதிகம் விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக பி.வி.ஆர் பாஸ்போர்ட் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.வி.ஆர் பாஸ்போர்ட்டின் மூலம் மக்கள் மாதத்திற்கு 4 படங்கள் பார்க்கலாம். திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே இது செல்லுபடியாகும். வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் பி.வி.ஆர் பாஸ்போர்ட் வைத்து படம் பார்க்க முடியாது.

    ஒரு நாளுக்கு ஒரு படம் மட்டுமே பார்க்க முடியும். ஒரு படத்தை 2 தடவைக்கு மேலாக பார்க்க முடியாது. பி.வி.ஆர் பாஸ்போர்ட் A-விற்கு மாதம் சந்தாவா 349 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு மாததிற்குள் 4 படம் பார்க்க முடியும். இல்லை என்றால் இது அடுத்த மாதத்திற்கு செல்லுபடி ஆகாது.

    பாஸ்போர்டின் இரண்டாம் B வகை மாதம் சந்தா ரூ.1047 செலுத்த வேண்டும். இதில், 90 நாட்கள் வரை உபயோகிக்கலாம். 90 நாட்களில் 12 படங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

    திங்களில் இருந்து வியாழக்கிழமை வரை மட்டுமே இதை உபயோகிக்க முடியும். வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமையில் புதுபடங்கள் வெளிவருவதால் மக்கள் அந்நாட்களில் பணம் கொடுத்துதான் பார்க்க வேண்டும்.

    பி.வி.ஆர் பாஸ்போர்ட்டை உபயோகித்து படம் பார்த்தால் ஒரு டிக்கெட்டின் விலை 87 ஆகவும், டிக்கெட்டுடன் சேர்ந்து கன்வீனியன்ஸ் ஃபீ செலுத்தி நாம் டிக்கெட்டுகளைப் பெறலாம். ஆன்லைனில் மட்டுமே பாஸ்போர்ட்டை வைத்து டிக்கெட் பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.

    பிவிஆர் பாஸ்போர்ட் ஏற்கனவே ஐதராபாத்தில் நடைமுறையில் உள்ளது. இப்போது, தெலுங்கானா, தமிழகத்திலும், கேரளத்திலும் அமலுக்கு வந்து இருக்கிறது. ரசிகர்களுக்கு மத்தியில் பி.வி.ஆர் பாஸ்போர்ட் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×