என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இயக்குனர் ஹரி"
- கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.
- ரத்னம் படத்தின் மூன்று 'சிங்கிள்' பாடல்கள் ஏற்கனவே வெளியானது.
நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி இருக்கிறார். அவரது இயக்கத்தில் 3வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார்.
இது விஷாலுக்கு 34- வது படமாகும். இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர்.
கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா பாடல் வரிகள் எழுதி உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடந்து வருகின்றன.
இப்படத்தின் மூன்று 'சிங்கிள்' பாடல்கள் ஏற்கனவே வெளியானது.
இந்நிலையில் நான்காவது சிங்கிளான "எதுவரையோ.." பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பின்னணி பாடகரான ஹரிஹரன் இப்பாடலை பாடியுள்ளர்.
இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நல்ல படங்கள் எப்போது வெளிவந்தாலும் அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையே ‘கில்லி’ படம் காட்டுகிறது.
- சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக உள்ளார்கள்.
புதுச்சேரி:
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த 'ரத்னம்' திரைப்படம் நாளை மறுநாள் 26-ந்தேதி வெளியாக உள்ளது.
புதுவையிலும் 'ரத்னம்' திரைப்படம் வெளியாகிறது. திரைப்படம் வெளியாக உள்ள சண்முகா திரையரங்குக்கு வந்த இயக்குனர் ஹரி, விஷால் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இதன்பின் இயக்குனர் ஹரி நிருபர்களிடம் கூறியதாவது:-
விஷாலுக்கு 3-வது திரைப்படமாக இந்த படத்தை இயக்கி உள்ளேன். மிகப்பெரிய வெற்றியை இந்த திரைப்படம் கொடுக்கும். மக்கள் அனைவரும் திரையரங்குக்கு வந்து படத்தை பார்க்க வேண்டும். சாலையில் செல்லும்போது ஒரு பிரச்சனையை கண்டால் யாரும் உதவ முன்வருவதில்லை. வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அப்படி உதவும் இளைஞனின் ஒரு கதை தான் இது. 'கில்லி' திரைப்படம் மறுபடியும் திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. நல்ல படங்கள் எப்போது வெளிவந்தாலும் அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையே இந்த படம் காட்டுகிறது.
இது போன்ற படங்களை பார்க்கும்போது நாமும் நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்று இயக்குனர்களுக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர்களுக்கு ஒரு தரப்பினர் மட்டுமே ரசிகர்களாக இருப்பார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக உள்ளார்கள். தலைவர் படம் என்றால் சொல்ல தேவையில்லை. அவர் படம் எப்போது வந்தாலும் முதல் நாளில் பார்ப்பேன். எந்த ஒரு இயக்குனரும் சாதிகளை முன்வைத்து படங்களை இயக்குவதில்லை.
நாட்டில் நடக்கும் சாதிய சிந்தனைகளை வைத்து மட்டுமே படங்கள் எடுக்கிறார்கள். சினிமா என்பது சாதி, மதம், மொழி என இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து விஷால் ரசிகர்களுடன் அவர் செல்பி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து நகர பகுதிக்கு வந்த இயக்குனர் ஹரி நேரு வீதி, பாரதி வீதி, குபேர் அங்காடி பகுதிகளுக்கு சென்று அங்கிருந்த வியாபாரிகளிடம் 'ரத்னம்' படம் பற்றி கூறி திரையரங்கில் பார்க்க அழைப்பு விடுத்தார்.
- கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.
- தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி உள்ளார்.அவரது இயக்கத்தில் 3- வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார். இது விஷாலுக்கு 34- வது படமாகும். இயக்குனர் ஹரி வேகமாகவும் விறுவிறுப்பாகவும் திரைக்கதை எழுதுவதில் திறம் பெற்றவர்.
இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா பாடல் வரிகள் எழுதி உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் முதல் 'சிங்கிள்' கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.'டோன்ட் வோரி டா மச்சி' என்ற வரிகளுடன் இந்த பாடல் அமைந்தது. ரசிகர்களிடம் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் செகண்ட் சிங்கிளான "எதனால " பாடல் வெளியாகியுள்ளது. பின்னணி பாடகரான சிந்தூரி விஷால் இப்பாடலை பாடியுள்ளர். இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சரியான ஒரு 'ஆக்ஷன்' படம் பண்ண வேண்டும் என்று நான் நினைத்து இருந்தேன்
- விஷால் பெர்பாமென்ஸ் கண்கலங்க வைக்கிற மாதிரி இருந்தது
நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார்.அவரது இயக்கத்தில் 3- வது முறையாக இதில் இணைந்து உள்ளார். தற்போது இது விஷாலுக்கு 34- வது படம் ஆகும்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடைபெற்று வருகின்றன.படத்தின் முதல் 'சிங்கிள்' பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.'டோன்ட் வோரி டா மச்சி' என்ற வரிகளுடன் இந்தபாடல் அமைந்து உள்ளது.
இந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.கவிஞர் விவேகா இந்த பாடலை எழுதி உள்ளார்.'கார்த்தி கே.சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம், நடித்து உள்ளனர்.இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஹரி பேசியதாவது:-
இந்த படத்தை பற்றி நான் சொல்வது என்றால் சரியான ஒரு 'ஆக்ஷன்' படம் பண்ண வேண்டும் என்று நான் நினைத்து இருந்தேன். ஏற்கனவே விஷாலுடன் 2 படம் பண்ணி இருந்தாலும் இது ஒரு சரியான படம். 'சாமி', 'சிங்கம்' படம் போன்று ஆக்சன் பட எனர்ஜி இந்த கதைக்குள் இருக்கிறது. ரொம்பவே நல்லா அமைந்து இருக்கிறது.
விஷால் ரொம்பவே வேற லெவலில் ஆக்சன் பண்ணி இருக்கிறார். பெர்பாமென்ஸ் கண்கலங்க வைக்கிற மாதிரி இருந்தது. எனக்காக 20 நாட்களில் தாமிரபரணி விஷாலாக வந்து நின்றார். எல்லாமே ஆரம்பிச்ச மாதிரி இருந்தது.படத்தை முடித்து விட்டோம். இன்றைக்கு 'பர்ஸ்ட் சிங்கிள்' உங்கள் முன் வெளியிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்