search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமி சினிமா"

    • இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
    • தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வில்லன் நடிகர்களுள் சமுத்திரக்கனியும் ஒருவர்

    சின்னதிரையில் இயக்குனராக அறிமுகமாகிய சமுத்திரக்கனி அதற்கடுத்து நாடோடிகள் படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து போராளி, நிமிர்ந்து நில், அப்பா, நாடோடிகள் 2 என பல படங்களை இயக்கியுள்ளார்.

    இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சுப்பிரமணியபுரம், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இவர் அப்பா, தலைக்கூத்தல், ஆண் தேவதை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.

    தற்பொழுது தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வில்லன் நடிகர்களுள் சமுத்திரக்கனியும் ஒருவர். பல தெலுங்கு நட்சத்திர நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில் தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம்' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகியுள்ளது.

    சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள 'ராமம் ராகவம்' பட டீஸர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாலா, நடிகர்கள் சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

    இதில் இயக்குநர் சமுத்திரக்கனி பேசும்போது, அப்பாக்கள் பற்றிய கதை என்றாலே தான் எமோஷனலாகி விடுவதாகப் பேசியுள்ளார். நிகழ்வில் பேசிய அவர், "அப்பா என்றாலே எனக்குள் ஒரு வேதியியல் மாற்றம் நடந்து விடும். அப்பாவாக இதுவரை பல கதைகளில் நடித்துள்ளேன். இந்தப் படத்திலும் அப்பாவாக நடித்துள்ளேன். ஆனால், ஒவ்வொரு கதாபாத்திரமும் வெவ்வேறு மாதிரி. ஒருமுறை கூட அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை.

    'ராமம் ராகவம்' படம் மக்களிடம் போய் சேர வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு முறையும் சின்னப் படம் எடுத்துவிட்டு அதைக் கொண்டு போய் சேர்க்க போராட வேண்டியதாக உள்ளது. இப்படித்தான் இதற்கு முன்பு நான் நடித்த சில சிறிய பட்ஜெட் படங்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை" என்று ஆதங்கத்தைக் கொட்டினார். அதைத்தொடர்ந்து இயக்குனர் பாலா சமுத்திரக்கனியை பாராட்டி சில வார்த்திகளை பேசினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
    • இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.

    ஷூட்டிங் நடைப்பெற்ற போது ஆரவ் எடுத்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைராலிகியது. பின் அஜித்திற்கு உடலில் சிறிய பிரச்சனை இருந்ததால் அதற்கு அறுவை சிகிச்சை செய்தார்.

    அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.

    இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அக்காட்சியில் ஆரவ் சீட்டில் கட்டப்பட்டு இருக்கிறார். அஜித் ஜீப்பை ஓட்டுகிறார். சில நிமிடங்களில் அந்த ஜீப் கவிழ்கிறது. இக்காட்சியை ஸ்டண்ட் டூப் உதவி இல்லாமல் அவரே நடித்து இருப்பது பிரமிக்க வைக்கிறது. இக்காட்சி இப்பொழுது இணையதளத்தில் வைரலாகியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவர் படம் இயக்கும் பாணி ஹாலிவுட் பிரபல இயக்குனரான குவெண்டின் டேரண்டின்னோ பிரதிபலிக்கும்.
    • இந்நிலையில் கார்த்தி சுப்பராஜ் அடுத்தபடம் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கிறார்.

    பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். வித்தியாசமான கதைக் களங்களில் படம் எடுப்பதில் கார்த்திக் சுப்பராஜ் திறம் பெற்றவர்.

    இவர் படம் இயக்கும் பாணி ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான குவெண்டின் டேரண்டின்னோவை பிரதிபலிக்கும். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கினார்.

    மக்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்தப்படம்.ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா போட்டி போட்டு நடித்துருப்பர்

    சினிமாவையே கதைக்களமாக வைத்து திரைப்படம் இயக்குவதில் கார்த்திக் சுப்பராஜ் வல்லமை வாய்ந்தவர். இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் அடுத்தபடம் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கிறார்.

    சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதீகாரப்பூர்வ அறிவிப்பை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். இந்தப்படம் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியில் கதைக்களமாக உருவாகவுள்ளது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திலிருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இப்படத்தின் மேல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் படத்தை இயக்கியனார் மாரி செல்வராஜ்.
    • கபடி விளையாட்டு பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமையவுள்ளது

    உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் படத்தை இயக்கியனார் மாரி செல்வராஜ். 2018-ஆம் ஆண்டில் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் எடுத்த முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். மக்களிடையே மிகுந்த பாராட்டை இப்படம் குவித்தது.

    பெரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியையடுத்து, 2021-ல் தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கினார். அடுத்ததாக 'வாழை' என்ற படத்தை இயக்கினார். அப்படப்பிடிப்பு முடிந்த நிலையில் மாரி செல்வராஜ் அவரின் 5-வது படத்தை இயக்கவுள்ளார்.

    நடிகர் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் இதில் நடிக்கவுள்ளனர். பா. ரஞ்சித் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். கபடி விளையாட்டு பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமையவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு வரும் மாதங்களில் ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

    "எனது 5-வது படத்தை நான் இயக்கவுள்ளேன் . மீண்டும் பா.ரஞ்சித் அண்ணாவுடன் இணைந்து பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது என மாரி செல்வராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குனர் ராமிடம் உதவி இயக்குநராக மாரி செல்வராஜ் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

    ×