என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொளத்தூர் தொகுதி"
- உணவுத்தளம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை இந்த படிப்பகம் உள்ளடக்கியுள்ளது.
- ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கின்ற அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 'முதல்வர் படைப்பகத்தை' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். படிப்பு தளம், பணியாற்றும் தளம் மற்றும் உணவுத்தளம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை இந்த படிப்பகம் உள்ளடக்கியுள்ளது. ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கின்ற அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
"முதல்வர் படைப்பகம்"... பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், வீட்டில் இருந்து பணிபுரிவதுபோல், அலுவலகங்களுக்கு வெளியே இருந்து பணிபுரியும் இளைஞர்களது வேலைக்கு ஏற்றாற்போல், வைபை (WiFi) உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பகிர்ந்த பணியிட மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் மாணவர்கள் கவனச் சிதறல்களின்றிப் பயில ஏதுவாகப் படிப்பகம் ஆகியவற்றைக் கொளத்தூர் தொகுதியில் உருவாக்கியுள்ளோம்.
இதுபோன்ற மையங்களைச் சென்னையின் பிற தொகுதிகளிலும் உருவாக்கிட வேண்டும் என அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் அறிவுறுத்தியுள்ளேன். இத்தகைய வாய்ப்புகளைச் சீரிய முறையில் இளைஞர்களும், மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; வாழ்வில் முன்னோக்கி நடைபோட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொளத்தூரில் பேப்பர் மில்ஸ் சாலையில் நவீன சந்தை உருவாக்க திட்டமிடப்பட்டு கடந்த மார்ச் மாதம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
- சந்தைக்கு வரும் பொது மக்கள் வசதிக்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி அமைக்கப்படுகிறது.
சென்னை:
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் கொளத்தூர் தொகுதி 10 ஆண்டுகளில் அபரிமித வளர்ச்சி அடைந்து
உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியாக இருப்பதால் கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.
முதலமைச்சரின் நேரடி கவனமும் அடிக்கடி ஆய்வு செய்வதாலும் கீழ் மட்ட ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை எந்த பணியையும் தொய்வில்லாமல் செய்கின்றனர். கொளத் தூர் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த மக்களின் தேவையை அறிந்து அதற்கேற்றவாறு பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
அந்த அடிப்படையில் கொளத்தூரில் பேப்பர் மில்ஸ் சாலையில் நவீன சந்தை உருவாக்க திட்டமிடப்பட்டு கடந்த மார்ச் மாதம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.23.50 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த பணியினை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொண்டுள்ளது.
இந்த நவீன சந்தையில் 'பிரஷ்' காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்ய 2 தளங்கள் அமைக்கப்படுகிறது.
தரை தளத்தில் காய்கறி, பழக் கடைகள் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் பகுதி ஒதுக்கப்படுகிறது. இதற்காக 28 கடைகளும் பொது மக்கள் காத்திருப்பதற்காக ஒரு பகுதியும் கட்டப்படுகிறது.
முதல் தளத்தில உலர் உணவு, மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாட தேவைக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் 36 அமைகிறது.
2-வது தளத்தில் பொது மக்கள் வசதிக்காக 41 கடைகள் செயல்பட வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சந்தைக்கு வரும் பொது மக்கள் வசதிக்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி அமைக்கப்படுகிறது. 85 மோட்டார் சைக்கிள்களும், 58 கார்களும் இதில் நிறுத்தக் கூடிய வகையில் இடவசதி அளிக்கப்படுகிறது. சந்தைக்கு குடும்பமாக வந்து பொருட்களை வாங்கி செல்ல ஏதுவாக விரிவான வசதி செய்யப்படுகிறது.
பொதுமக்கள் சிரமம் இல்லாமல், நெரிசல் இல்லாமல் சந்தைக்கு செல்வதற்கு தேவையான வசதிகள் செய்யப்படுகிறது. மெகா சூப்பர் மார்க்கெட் போல இந்த நவீன சந்தை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கொளத்தூர், பெரியார் நகர், பெரம்பூர், திரு.வி.க.நகர், பூம்புகார் நகர், ரெட்டேரி, ராஜமங்கலம் விநாயகபுரம் உள்ளிட்ட மக்களை கவரும் வகையில் நவீன சந்தை உருவாகிறது.
59,390 சதுர அடியில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் சந்தையை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வை செய்து வருகின்றனர். மிக விசாலமான இட வசதியுடன் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறக்கூடிய வகையில் சந்தை கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது.
வட சென்னையின் ஒரு முக்கிய அங்கமாக இந்த நவீன சந்தையை உருவாக்க சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
- பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
- மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதற்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில், "உதவுதல் நம் முதல் கடமை" என்ற பெயரில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2000 இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக 26 கிலோ அரிசி, துணிமணிகள், பேரிச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்ததுடன், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதற்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்