search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிகேஷ்"

    • ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
    • இந்த படம் மூலம் மமிதா பைஜு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

    கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு தமிழுக்காக போராடும் ஒரு இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் நடித்து மார்ச் 22 ஆம் தேதி ரெபெல் திரைப்படம் வெளியானது . பிரேமலு படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்ற மமிதா பைஜு இப்படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

    இப்படத்தை நிகேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்திற்கு மக்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

     


    படம் வெளியாகி 2 வாரம் ஆகிய நிலையில் தற்போது ஓ.டி.டி. தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது.

    படம் வெளியாகி 2 வாரங்களில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியாக தொடர்ந்து செய்தால் மக்களுக்கு தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் ஆசை குறைந்துவிடும் என திரைப்பட விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இது என்னிடம் வந்தபோது சந்தோஷமாக இருந்தது.
    • நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார்.

    ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரெபல். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் மார்ச் 22ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    சமீபத்தில் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஜி.வி. பிரகாஷ் ரெபல் படம் பற்றி பேசியுள்ளார்.

     


    இது குறித்து அவர் பேசும் போது, "ரஞ்சித் சாருடன் பணியாற்றும், தங்கலான் மிரட்டலான படமாக வந்திருக்கிறது. அவருடன் அவர் தயாரிப்பில் இன்னொரு படம் செய்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. ரெபல் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது."

    "தமிழ் பற்றிப் பேசும் கதை, இது என்னிடம் வந்தபோது சந்தோஷமாக இருந்தது. இயக்குநர் நிகேஷ் அவரது சொந்தக்காரரின் வாழ்வில் நடந்த உண்மைக்கதையை எடுத்து திரைப்படமாகச் செய்துள்ளார். மமிதா பைஜு மிக அழகாக இந்த ரோலை செய்துள்ளார்."

    "நீண்ட காலம் கழித்து ஸ்டூடியோ கிரீன் உடன் படம் செய்கிறேன். அவர் தான் டார்லிங் படத்தில் நடிகனாக என் வாழ்வை ஆரம்பித்து வைத்தார். அவருக்கு இந்த வருடம் வெற்றிகரமாக அமையும்," என்று தெரிவித்தார்.

    ×