என் மலர்
நீங்கள் தேடியது "பேட்மேன்-2"
- 'பேட்மேன் ஃபாரெவர்' படத்தில் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்து வால் கில்மர் பெரும் புகழ் பெற்றார்.
- டாம் குரூசின் டாப் கன் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வால் கில்மர் நடித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் தனது 65 ஆவது வயதில் காலமானார்.
1984 ஆம் ஆண்டில் வெளியான உளவு திரைப்படமான 'டாப் சீக்ரெட்' மூலம் வால் கில்மர் ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் 'பேட்மேன் ஃபாரெவர்' படத்தில் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வால் கில்மர் பெரும் புகழ் பெற்றார். மேலும் டாம் குரூசின் டாப் கன் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வால் கில்மர் நடித்துள்ளார்.
நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த வால் கில்மர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அவரது மகள் மெர்சிடிஸ் கில்மர் தெரிவித்தார்
கில்மருக்கு 2014 ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர் சிகிச்சை பெற்று புற்றுநோயில் இருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2023-ல் ஹாலிவுட்டில் நடந்த வேலை நிறுத்தத்தால் படத்தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன
- மேலும், 2026 அக்டோபர் 2-ந் தேதி பேட்மேன் -2 படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
'தி பேட்மேன்' ஆங்கில படம் 2022-ல் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக ராபர்ட் பாட்டின்சன், நடிகை
ஜோ க்ராவிட்ஸ் சிறப்பாக நடித்ததன் மூலம் உலக அளவில் பெரும் வெற்றி பெற்றது. மேலும், கோடிக்கணக்கான ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இந்த படத்தை பிரபல இயக்குனர் மேட் ரீவ்ஸ் இயக்கியிருந்தார். பேட்மேன் உலகளவில் 772 மில்லியன் டாலர் வசூலித்தது.
'பேட்மேன்' படம் உயர் வர்க்கத்தினரை குறி வைத்து கொலை செய்யும் ஒரு கொலை கும்பலை கண்டுபிடித்து அழிக்கும் கதை. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பேட்மேன் -2 படத்தில் ராபர்ட் பாட்டின்சன் மீண்டும் நடிப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து படம் தயாரிப்பு பணிகள் தொடங்கின. பேட்மேன்- 2 படத்தில் கதாநாயகனாக மீண்டும் ராபர்ட் பாட்டின்சன் நடிக்க தொடங்கினார். மேலும், பேட்மேன் -2 வருகிற 2025 அக்டோபர் 3-ல் வெளியிடவும் திட்டமிடப்பட்டது.
2023-ல் ஹாலிவுட்டில் நடந்த வேலை நிறுத்தத்தால் படத்தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக தற்போது 'தி பேட்மேன் - 2' வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும், 2026 அக்டோபர் 2-ந் தேதி பேட்மேன் -2 படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.