search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டை ஸ்பிரிங் ரோல்"

    • வீட்டில் உள்ள குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும்.
    • பள்ளிகளுக்கு குழந்தைகளுக்கு ஸ்நாக்காக செய்துகொடுக்கலாம்.

    வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சற்று வித்தியாசமாக மொறு மொறு சுவையில் எக் ஃபிரான்கி ஃபிரை தயார் செய்யலாம். எப்போதும் சமோசா அல்லது சப்பாத்தி ரோல், ஸ்பிரிங் ரோல் போன்று செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இந்த மாதிரி டிரை பண்ணிப்பாருங்க. உங்கள் வீட்டில் உள்ள குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும். அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுவர். பள்ளிகளுக்கு குழந்தைகளுக்கு ஸ்நாக்காக செய்துகொடுக்கலாம். நிச்சயமாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 100 கிராம்

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    உருளைக்கிழங்கு- 4

    முட்டை - 2

    எள்ளு- 1/4 தேக்கரண்டி

    கரம் மசாலாதூள் - அரை தேக்கரண்டி

    மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி

    எண்ணெய் - தேவையான அளவு

    மிளகுத்தூள் - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் முட்டையை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு முட்டையை 4 பாகமாக வருமாறு வெட்டிக் கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு கோதுமை மாவில் உப்பு மற்றும் எள் அல்லது சோம்பு சேர்த்து கலந்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவினை சப்பாத்தி மாதிரி வட்டமாக திரட்டிக்கொள்ள வேண்டும்.

    இப்போது மசாலா தயார் செய்யலாம். வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம், கரம்பசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து ஒன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் நாம் ஏற்கனவே திரட்டி வைத்துள்ள சப்பாத்திக்கு மேல் இந்த மசாலா கலவைகளை பரப்பி விட வேண்டும். பிறகு பீட்ஸா கட்டர் கொண்டு வட்ட வடிவமான சப்பாத்தியை 6 பாகங்களாக வருமாறு வெட்டிக்கொள்ள வேண்டும். வெட்டிய பாகங்களில் வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை வைக்க வேண்டும். பின்னர் இதனை சுருள் போல உருட்டி அதன் ஓரங்களை மசாலா வெளியே வராதவாறு ஒட்ட வேண்டும். இப்போது சமோசாக்கள் தயார்.

     அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக போட்டு பொறித்து எடுக்க வேண்டும். சுவையான எக் ஃபிரான்கி ஃபிரை தயார். குழந்தைகள் மிகவும் விரும்புவர்.

    ×