என் மலர்
நீங்கள் தேடியது "காதி"
- கடந்தாண்டு இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தார்
- மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ரூ.90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இப்படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் அனுஷ்கா. பல படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இதனையடுத்து கடந்தாண்டு இயக்குநர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ரூ.90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நடித்து வந்த அனுஷ்கா, இப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் காதி என்கிற படத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் ஒடிடி உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் நடிகர் விக்ரம் பிரபு அறிமுகமாகவுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா. கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் நடிகர் விக்ரம் பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு காதி படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இப்படத்தின் விக்ரம் பிரபுவின் சிறப்பு க்ளிம்ப்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.