search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹேர் கலரிங்"

    • ரசாயன ஷாம்பூக்கள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
    • நம் தலைமுடியை பாதுகாக்க சூப்பரான ஹேர் பேக் ஒன்றை பார்க்கலாம்.

    இன்றைய வாழ்க்கைமுறை, பணிச்சுமை, உடல் உஷ்ணம் ஆகியவை நமது உடல் மற்றும் உள்ளம் ஆகியவற்றுக்கு பல பிரச்சனைகளை தருகிறது. அவற்றில் தலைமுடி பிரச்சனை முக்கியமானது. ரசாயன ஷாம்பூக்களை அளவு தெரியாமல் பயன்படுத்துவதால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகிறது.

    அதில் உள்ள சோடியம் லாரில் சல்ஃபேட், சோடியம் லாரத் சல்ஃபேட் போன்ற வேதியியல் பொருட்கள் முடி உதிர்தல், தோல்வீக்கம், நோயெதிர்ப்புக்கேடு, ஒவ்வாமை, கண்புரைக்கேடு போன்றவற்றை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு மாற்றாக இயற்கையான முறையில் வீட்டிலேயே ஒரு ஹேர் பேக் தயாரித்து பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும்.

    பொதுவாக நம்முடைய தலை முடியை நாம் சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு வாஷ் செய்து வருவது வழக்கம். தொடர்ச்சியாக இவற்றை நாம் பயன்படுத்துவதால் நம்முடைய கூந்தல் வறட்சியை சந்திக்கக் கூடும். இதனால் முடி உடைத்தல், உதிர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதனால் இந்த பாதிப்பில் இருந்து நம் முடியை பாதுகாத்துக் கொள்ள ஒரு சூப்பரான ஹேர் பேக் ஒன்றை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ஷியா பட்டர் – 2 டீஸ்பூன்

    தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்

    பாதாம் ஆயில் – 2 டீஸ்பூன்

    கற்றாழை – 50 கிராம்

     செய்முறை:

    இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு குட்டி பவுலில் ஷியா பட்டரை போட்டுக் கொள்ளவேண்டும். டபுள் பாய்லிங் முறையில் இதனை உருக்க வேண்டும். அதாவதுஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதன் நடுவில் அந்த குட்டி பவுலை வைத்து பட்டரை உருக்கிக் கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு கற்றாழையை சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் இதோடு உருக்கிய பட்டர், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேக்கை நம் தலை முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். மேலும் ஒரு 20 நிமிடங்கள் கழித்து தலை முடியை மைல்டான ஷாம்பு போட்டு வாஷ் செய்து கொள்ளலாம்.

    ×