என் மலர்
நீங்கள் தேடியது "அருண் நேரு"
- ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் 2 இல்லங்களிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
- திருச்சி தில்லை நகரில் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் 10 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவுபெற்றுள்ளது.
சென்னை:
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 4 இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, சென்னையில் அருண் நேரு தொடர்புடைய நிறுவனத்திலும், ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் 2 இல்லங்களிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, திருச்சி தில்லை நகரில் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் 10 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவுபெற்றுள்ளது. அதேபோல் கோவை மசக்காளிபாளையத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டில் நடைபெற்ற சோதனையும் நிறைவுபெற்றுள்ளது.
- அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலணி, எம்.ஆ.சி. நகர் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை:
சென்னையில் அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண்நேரு வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலணி, எம்.ஆ.சி. நகர் உள்ளிட்ட இடங்களிலும் TVH குரூப் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மத்திய அரசின் மொழி கொள்கையில் தமிழ்நாட்டிலும் கூட தமிழ் மொழிக்கு இடமில்லை
- மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் மத்திய அரசு, தனது சொந்த பள்ளிகளில் கூட மாநில மொழியான தமிழை சேர்க்க மறுக்கிறது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி. அருண் நேரு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒன்றிய அரசின் மொழி கொள்கையில் தமிழ்நாட்டிலும் கூட தமிழ் மொழிக்கு இடமில்லை என்பது PM Shri கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் (முன்னர் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்) மூலம் மீண்டும் தெளிவாகிறது.
திருச்சிராப்பள்ளியில் உள்ள PM Shri கேந்திரிய வித்யாலயா எண் 2, 2025-26 கல்வியாண்டிற்கான ஒப்பந்த ஆசிரியர் பணியிடங்களுக்காக நேர்காணல் அறிவிப்பை 16-03-2025 அன்று வெளியிட்டுள்ளது.
இதில்: PGT (பட்டதாரி ஆசிரியர்): பொருளாதாரம், ஆங்கிலம்
TGT (பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்): இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்
PRT (முதன்மை ஆசிரியர்): பொது மற்றும் இசைபோன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆனால், தமிழ் மொழிக்கு எந்த பணியிடமும் குறிப்பிடப்படவில்லை. இது தமிழ்நாட்டின் மொழியை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கற்பிக்க விருப்பமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், RTI தகவல்களின்படி, தமிழ் ஆசிரியர்கள் இல்லை, ஆனால் இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்கள் பெருமளவில் உள்ளனர். இந்த பள்ளிகள் தற்போது PM Shri என்ற பெயரில் மறுபெயரிடப்பட்டு, தேசிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) மற்றும் அதன் மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில், இந்த பள்ளிகள் இன்னும் இருமொழி கொள்கையை (இந்தி மற்றும் ஆங்கிலம்) மட்டுமே பின்பற்றுகின்றன, தமிழ்நாட்டின் மொழியான தமிழை கூட அவர்கள் கற்பிக்க விரும்பவில்லை. ஆனால் இப்பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது.
சமீபத்திய நிகழ்வுகளில் மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்கள் NEP 2020 வலியுறுத்தும் மும்மொழி கொள்கையை பின்பற்றி செயல்படும் PM Shri பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடவில்லை என்ற காரணத்தால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (SSA) மூலம் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய 2000 கோடி அளவிலான நிதியை நிறுத்தி வைத்து, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இது தமிழ்நாட்டின் மொழியியல் அடையாளத்தையும், தமிழ் மக்களின் உரிமைகளையும் புறக்கணிப்பதாகும். தமிழ்நாடு இரு மொழி கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பின்பற்றுகிறது, மற்றும் இந்தியை திணிக்கும் முயற்சியாக NEP 2020-ஐ எதிர்க்கிறது. ஆனால் மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் ஒன்றிய அரசு, தனது சொந்த பள்ளிகளில் கூட மாநில மொழியான தமிழை சேர்க்க மறுக்கிறது.
ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் பண்பாட்டையும் மொழியையும் மதிக்க வேண்டும். PM Shri கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும், மேலும் SSA நிதிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
- பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கற்பகத்திடம் வேட்புமனுவை அருண் நேரு வழங்கினார்.
பெரம்பலூர்:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடக்கிறது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 28-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30-ந் தேதி கடைசி நாளாகும்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-9, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகிறது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கற்பகத்திடம் வேட்புமனுவை அருண் நேரு வழங்கினார். திமுகவில் முதல் ஆளாக அருண்நேரு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
- அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை கொசூர் பகுதியில் இருந்து பிரசாரம் மேற்கொண்டார்.
- எனக்கு மயக்கமாக வருகிறது என்று கூறி உடனடியாக பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார்.
கரூர்:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 21 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் கே.என்.நேரு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று (புதன்கிழமை) காலை கொசூர் பகுதியில் இருந்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனக்கு மயக்கமாக வருகிறது என்று கூறி உடனடியாக பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு, பிரசார வாகனத்திலிருந்து கீழே இறங்கி தனது காரில் ஏறி மருத்துவமனைக்கு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.