என் மலர்
நீங்கள் தேடியது "டிஎம் கிருஷ்ணா"
- பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.
- டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது.
சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில்,
'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி உள்ள டி.எம்.கிருஷ்ணாவிற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.
இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.
டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை! என்று தெரிவித்துள்ளார்.
- சமூகம் சார்ந்த முற்போக்கு சிந்தனையாளரான இவருக்குள்ள அசாத்திய இசைத்திறமையின் அடிப்படையில்தான் விருது கொடுக்கப்படுகிறது.
- "வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையை திறப்போம்" என்று ராகுல் காந்தி அடிக்கடி கூறுவார்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சமூக சிந்தனையாளர், சுற்றுசூழல் ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் சிறந்த கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு தி மியூசிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூகம் சார்ந்த முற்போக்கு சிந்தனையாளரான இவருக்குள்ள அசாத்திய இசைத்திறமையின் அடிப்படையில்தான் விருது கொடுக்கப்படுகிறது. ஆனால், அவர் விருது பெறுவதில் குழப்பம் ஏற்படுத்தும் சிலரின் முயற்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
"வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையை திறப்போம்" என்று ராகுல் காந்தி அடிக்கடி கூறுவார். அதுபோன்று அனைவரின் மீதும் அன்பு செலுத்துவோம் என கூறியுள்ளார்.
சமூக சிந்தனையாளர், சுற்றுசூழல் ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் சிறந்த கர்நாடக இசைப் பாடகர் @tmkrishna அவர்கள் #TheMusicAcademy-இன் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— Selvaperunthagai K (@SPK_TNCC) March 23, 2024
சமூகம் சார்ந்த முற்போக்கு சிந்தனையாளரான இவருக்குள்ள…
- இசை கச்சேரியில் தந்தை பெரியார், நாராயண குரு, பெருமாள், முருகன் ஆகியோரின் பாடல்களை பாடி கர்நாடக இசை கச்சேரியில் புரட்சியை புகுத்தியவர்.
- பாரம்பரிய உடைகளுக்கு விரோதமாக லுங்கியும், பீச் சர்ட் அணிந்து கச்சேரியில் டி.எம். கிருஷ்ணா பாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடக இசையில் முற்போக்கான சிந்தனைகள், கருத்துகளை பரப்புகிற வகையில் முற்றிலும் மாறுபட்ட இசைக் கச்சேரிகளை நடத்தி, மக்களின் பேராதரவை பெற்று வருகிற டி.எம். கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமியின் 98-வது ஆண்டு மார்கழி கச்சேரியின்போது அவருக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டிருப்பது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன், பாராட்டுகிறேன்.
பாரம்பரிய மரபுகளுக்கு மாறாக, துணிச்சலுடன் இசை கச்சேரிகளை நடத்தி வருபவர் டி.எம். கிருஷ்ணா. குறிப்பாக ஏழை, எளிய மக்கள் வாழ்கிற சேரிகளிலும், மீனவர் பகுதிகளிலும் கர்நாடக இசை கச்சேரிகளை நடத்தி அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றவர். அதேபோல, சமீபத்தில் பாரம்பரிய உடைகளுக்கு விரோதமாக லுங்கியும், பீச் சர்ட் அணிந்து கச்சேரியில் டி.எம். கிருஷ்ணா பாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சமீபத்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை மியூசிக் அகாடமியில் நடந்த கச்சேரியில் அவர் பாடிய பாடல்களை கேட்க அரங்கமே நிரம்பி வழிந்தது. இறுதியாக அரங்கத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி உற்சாகமூட்டியதை எவரும் மறந்திட இயலாது.
அவரது இசை கச்சேரியில் தந்தை பெரியார், நாராயண குரு, பெருமாள், முருகன் ஆகியோரின் பாடல்களை பாடி கர்நாடக இசை கச்சேரியில் புரட்சியை புகுத்தியவர். கர்நாடக இசை என்பது குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்கப்பட்டிருந்ததை மீட்டு அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக மாற்றியவர் டி.எம். கிருஷ்ணா. அதனால், அவர்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் மியூசிக் அகாடமி வழங்குகிற எம்.எஸ். சுப்புலட்சுமி சங்கீத கலாநிதி விருதை வழங்கக் கூடாது என்று வழக்கு தொடுத்து தற்போது உச்சநீதிமன்றம் அந்த விருதை வழங்கலாம் என்று தீர்ப்பு வழங்கிய பிறகு தற்போது விருது வழங்கப்படுகிறது.
இத்தகைய துணிச்சல்மிக்க டி.எம். கிருஷ்ணாவுக்கு இந்து குழுமமும், மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளியும் உற்ற துணையாக இருந்து சங்கீத கலாநிதி என்ற விருதை டி.எம். கிருஷ்ணா பெறுவதற்கு ஆதரவாக இருந்ததற்காக அவர்களை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். சமூக, கலாச்சார, சீர்திருத்த கருத்துகளை பொதுவெளியில் துணிந்து பேசக் கூடிய பேராற்றல் மிக்க டி.எம். கிருஷ்ணாவின் பணி சிறக்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளது.
- டி.எம். கிருஷ்ணா பாடல் பாடியதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்து பாராட்டினார்.
சென்னை நகரில் பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் திருவிழாவின்போது 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த திருவிழாவை கலை பண்பாட்டுத் துறை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டின் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளது. இதனை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.
சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழாவின் தொடக்க விழாவில் பிரபல பாடகர் டி.எம். கிருஷ்ணா அவர்கள் தந்தை பெரியார் குறித்து உணர்ச்சி பொங்க பாடல் பாடினார்.
பெரியார் குறித்து டி.எம். கிருஷ்ணா பாடல் பாடியதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்து பாராட்டினார்.