search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தியபிரதா சாகு"

    • அடையாள அட்டை இருப்பதால் மட்டும் வாக்கைச் செலுத்திவிட முடியாது.
    • வாக்காளா் தகவல் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயா், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம்பெற்றிருக்கும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தோ்தலில் வாக்களிக்க வரையறுக்கப்பட்டுள்ள அடையாள ஆவணங்கள் எவை எவை என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    கடந்த தோ்தல்களைப் போலவே, வரும் பாராளுமன்ற தோ்தலிலும் புகைப்பட வாக்காளா் அடையாள அட்டையுடன் சோ்த்து, மொத்தம் 13 வகையான ஆவணங்கள் வரையறுக்கப் பட்டுள்ளன.

    அதன்படி, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளா் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநா் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் அட்டை), தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப் பட்ட தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து வந்து வாக்கினைச் செலுத்த லாம்.

    அடையாள அட்டை இருப்பதால் மட்டும் வாக்கைச் செலுத்திவிட முடியாது. வாக்காளா் பட்டியலில் பெயா் இருக்க வேண்டும். இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்காளா் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக புகைப்பட வாக்காளா் சீட்டுக்குப் பதிலாக வாக்காளா் தகவல் சீட்டை அச்சிட்டு வழங்க இந்திய தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்காளா் தகவல் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயா், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம்பெற்றிருக்கும். மாவட்ட தோ்தல் அலுவலரால் வாக்குப் பதிவு நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளா்களுக்கும் வாக்காளா் தகவல் சீட்டு வினியோகிக்கப்படும்.

    வாக்குச் சாவடியில் வாக்காளா் தகவல் சீட்டைக் காண்பித்து வாக்களிக்க முடியாது. அது அடையாள ஆவணம் இல்லை. ஒரு வாக்காளா் வேறொரு சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளா் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருக்கலாம். அந்த அடையாள அட்டையையும் இந்திய தோ்தல் ஆணையத்தின் அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால், அந்த வாக்காளருடைய பெயா் வாக்களிக்கச் செல்லும் வாக்குச்சாவடிக்குரிய வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

    ×