search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஓபி அணி"

    • பெண்கள் இறுதிப்போட்டியில் தெற்கு ரெயில்வே 3-2 என்ற கணக்கில் ஐ.சி.எப். அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
    • 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 2-0 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை தோற்கடித்தது.

    சென்னை:

    நெல்லை நண்பர்கள் கைப்பந்து கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி.ஜான் மற்றும் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    பெண்கள் இறுதிப்போட்டியில் தெற்கு ரெயில்வே 3-2 என்ற கணக்கில் ஐ.சி.எப். அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 2-0 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை தோற்கடித்தது.

    பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ஜெ. மேகநாத ரெட்டி, தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் டபிள்யூ. ஐ.தேவாரம் ஆகியோர் பங்கேற்றனர். சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு 2 குரோ எச்.ஆர். கோப்பையுடன் ரூ.50 ஆயிரமும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரோமா கோப்பையுடன் ரூ.40 ஆயிரமும், 3-வது இடம் பெற்ற அணிக்கு டாக்டர் போஸ் நினைவு கோப்பையுடன் ரூ.30 ஆயிரமும், 4-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.20 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

    டாக்டர் ஜி.டி.போஸ் நினைவு ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் அஜித் போஸ், ஷீபா அஜித் போஸ், வேளாங்கண்ணி கல்வி குழும செயலாளர் டாக்டர் தேவ் ஆனந்த், போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் பி.ஜெகதீசன், ஏ.தினகர், சி.ஸ்ரீகேசவன், ஏ.பாக்யராஜ் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் ஜி.எஸ்.டி.-ஐ.ஓ.பி. அணிகள் மோதுகின்றன. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் வருமான வரி-டி.ஜி.வைஷ்ணவா அணிகள் மோதுகின்றன.

    • கைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
    • தமிழ்நாடு போலீஸ் 2-0 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பையும் தோற்கடித்தன.

    நெல்லை நண்பர்கள் கைப்பந்து கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி.ஜான் மற்றும் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    'ஏ' பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஐ.ஓ.பி. 25-22, 25-19 என்ற கணக்கில் எஸ்.டி.ஏ.டி.யை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. இந்த பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் வருமானவரி 2-0 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

    'பி' பிரிவில் நடந்த ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். 26-24, 25-16 என்ற கணக்கில் இந்தியன் வங்கியை தோற்கடித்தது. இந்தியன் வங்கி அணிக்கு 2-வது தோல்வி ஏற்பட்டது. மற்றொரு போட்டி டி.ஜி. வைஷ்ணவா 2-1 என்ற கணக்கில் ஜி.எஸ்.டி.யை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

    பெண்கள் பிரிவில் ஐ.சி.எப்.2-0 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்.அணியையும், தமிழ்நாடு போலீஸ் 2-0 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பையும் தோற்கடித்தன.

    ×