என் மலர்
நீங்கள் தேடியது "அஜய் தேவ்கான்"
- இப்படம் கடந்த மார்ச் 8-ந் தேதி தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்பட்டது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
- 'பைட்டர்' படத்திற்கு பின் 2024 -ம் ஆண்டில் அதிக வசூல் செய்த 2- வது இந்தி படம் என்ற சாதனையை இப்படம் பெற்று உள்ளது.
பிரபல இயக்குனர் விகாஸ் பாஹ்ல் இயக்கிய இந்தி திரைப்படம் 'ஷைத்தான்'. இப்படம் 'வாஷ் என்ற குஜராத்தி திரைப்படத்தின் 'ரீமேக்' படமாகும்.
இப்படத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவன், ஜான்கிபோடிவாலா ஆகியோர் நடித்துள்ளனர்.சுமார் ரூ.65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டது.
இப்படம் கடந்த மார்ச் 8-ந் தேதி தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்பட்டது. ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. தற்போது திரையரங்குகளில் 3- வது வாரமாக வெற்றிகரமாக இப்படம் ஓடி வருகிறது.

இந்நிலையில் இப்படம் தற்போது 'சூப்பர்ஹிட்' ஆகியுள்ளது.உலகம் முழுவதும் இப்படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் சாதனை படைத்து ரூ.200 கோடியை குவித்துள்ளது.
ஹிருத்திக் ரோஷன்- தீபிகா படுகோன் நடித்த 'பைட்டர்' படத்திற்கு பின் 2024 -ம் ஆண்டில் அதிக வசூல் செய்த 2- வது இந்தி படம் என்ற சாதனையை இப்படம் பெற்று உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பான் மசாலாவின் ஒவ்வொரு தானியமும் குங்குமப்பூவின் சக்தியைக் கொண்டுள்ளது என்று விளம்பரப்படுத்தினர்.
- "குங்குமப்பூ தடவிய குட்கா" என்ற பெயரில் விமல் பான் மசாலாவை வாங்க பொதுமக்கள் விளம்பரம் மூலம் ஈர்க்கப்படுகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையம், பான் மசாலா விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விமல் பான் மசாலாவை தயாரிக்கும் ஜேபி இண்டஸ்ட்ரீஸின் தலைவர் விமல் குமார் அகர்வாலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் யோகேந்திர சிங் பதியால் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அவரின் புகாரில், மேற்கூறிய நடிகர்கள் நடித்த பான் மசாலா விளம்பரங்களில், " தானே தானே மெய்ன் ஹை கேசர் கா தம் (பான் மசாலாவின் ஒவ்வொரு தானியமும் குங்குமப்பூவின் சக்தியைக் கொண்டுள்ளது)" என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஜேபி இண்டஸ்ட்ரீஸ் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்து வருகிறது. பொது மக்கள் தொடர்ந்து பான் மசாலாவை அதிகம் உட்கொள்கிறார்கள்.
"குங்குமப்பூ தடவிய குட்கா" என்ற பெயரில் விமல் பான் மசாலாவை வாங்க பொதுமக்கள் விளம்பரம் மூலம் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் பான் மசாலா ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்து புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை வரவழைக்கிறது.
எனவே மக்களை தவறாக வழிநடத்திய நிறுவனம் மீதும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆணையம் தற்போது சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கும் நடிகர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நோட்டீஸ் கிடைத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அனைத்து நடிகர்களும், பான் மசாலா தயாரிப்பு நிறுவனமும் தங்கள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது.