என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கைகளில் கருமை நீங்க"
- வெயில் காலத்தில் கை, கால் உடல் முழுவதும் கருப்பாக மாறிவிடும்.
- பப்பாளி சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவும்.
பொதுவாகவே வெயில் காலத்தில் வெளியே சென்றால் முகம், கை, கால் உடல் முழுவதும் கருப்பாக மாறிவிடும். இது போன்ற சூழ்நிலையில் நாம் முகத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு கைகளுக்கும் கொடுப்பதில்லை. கைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எலுமிச்சை ஸ்க்ரப்:
முதலில் ஒரு டீஸ்பூன் தயிர், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து பேக் தயார் செய்துகொள்ள வேண்டும். இதனை கைகளில் தடவி, சிறிது நேரம் கைகளை மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இதில் உள்ள எலுமிச்சை சாறு ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அரிசி சருமத்தில் அழுக்குகளை வெளியேற்றுகிறது. எனவே கைகளில் இருக்கும் கருமை நிறம் மாறி கைகள் பளிச்சென்று இருக்கும்.
பப்பாளி ஸ்க்ரப்:
கைகளில் உள்ள கருமை நீங்க பப்பாளி அதிக அளவில் உதவும். இந்த பேக் தயாரிப்பதற்கு 1 டீஸ்பூன் பப்பாளி மற்றும் ஒரு டீஸ்பூன் பப்பாளி விதைகள் தேவைப்படும். முதலில் பப்பாளியை துண்டுகளாக நறுக்கி அதன் சதைப்பகுதியை பிசைந்து கொள்ள வேண்டும். இப்போது அதனுடன் பப்பாளி விதைகளை சேர்த்து 5 நிமிடம் உங்கள் கைகளை மசாஜ் செய்ய வேண்டும். இதைச் செய்த பிறகு, சருமத்தை சுத்தம் செய்யுங்கள். இது சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவும்.
காபி ஸ்க்ரப்:
இந்த ஸ்க்ரப் செய்ய காபி, அரை தேக்கரண்டி, தேன் மற்றும் அரை தேக்கரண்டி பால் தேவைப்படும். இவை அனைத்தையும் கலந்து ஒரு ஸ்க்ரப் தயார் செய்துகொள்ள வேண்டும். இப்போது ஸ்க்ரப்பை கைகளை தடவி சிறிது நேரம் கழித்து நன்றாக மசாஜ் செய்து, அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவ வேண்டும்.
தயிர் மற்றும் மஞ்சள் பேக்:
இதற்கு அரை கப் தயிர் அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து இவை இரண்டையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதனை கைகளில் தடவி 15 நிமிடம் அப்படியே வைக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது போன்று ஏதாவது ஒரு முறையில் தொடர்ந்து செய்து வர உங்கள் கைகளில் உள்ள கருமை மறைந்து நிறம் மெருகேறும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்