search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாத வெடிப்பு பிரச்சனை"

    • உடலில் அதிக பித்தம் ஏற்படுவதால் பாத வெடிப்பு ஏற்படுகிறது.
    • உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் பாதங்களில் இருக்கின்றன.

    உடலில் அதிக பித்தம் ஏற்படுவதால் பாத வெடிப்பு ஏற்படுகிறது. உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் பாதங்களில் இருக்கின்றன. இதனால் அதனை சுத்தம் செய்து தூண்டும்போது ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. பாத வெடிப்புகள் உள்ளதால் நடப்பதே சிரமமாகிறது. கல் போன்ற சிறு பொருட்களும் உள்நுழைந்து விடுகிறது. இதனால் புண்கள் ஏற்படுகின்றன.

    பாதத்தில் வெடிப்பு என்பது பலரை சிரமத்திற்கு உள்ளாக்கும் விஷயமாக உள்ளது. நமது பாதங்களை சுத்தமாக பராமரிக்காமல் இருக்கும் பட்சத்திலேயே பாத வெடிப்பானது உண்டாகிறது. இந்த வெடிப்பை சரிவர பராமரிக்காமல் இருக்கும் பட்சத்தில், புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்.

    பொதுவாக கிருமிகளின் தொற்று மூலமாகவும். உடலின் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் ஏற்படுகிறது. பாத வெடிப்பு பிரச்சனை ஏற்பட்டால் பாதத்தின் அழகும் குறைந்து, பாத வெடிப்பு புண்களாக மாறி வலியையும் ஏற்படுத்துகிறது. பாதத்தில் ஏற்படும் பாத வெடிப்புகளை இயற்கையான முறையில் சரி செய்யும் முறை குறித்து இனி காண்போம்.

    நமது பாதங்கள் பித்தவெடிப்புடன் வறட்சியாக காணப்படும் பட்சத்தில். ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் அல்லது பாதம் எண்ணெய்யை சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்துகொள்ள வேண்டும். பின்னர் இளம் சூடுள்ள நீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து கழுவிய பிறகு தயார் செய்யப்பட்ட பேஸ்ட்டை தடவ வேண்டும்.

    பாதத்தின் பித்த வெடிப்பானது தொடக்க கடத்தில் இருக்கும் பட்சத்தில், வெறுமையான தேன் மற்றும் ஆலிவ் ஆயிலை தடவி வரலாம். இந்த முறையை வாரத்திற்கு தொடர்ந்து செய்து வரவேண்டும்.

    தினமும் சாப்பிடும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, பாதத்தில் தடவி சுமார் 10 நிமிடங்கள் கழித்த பின்னர்.. நீரினால் கழுவி வர பாத வெடிப்புகள் மறையத் தொடங்கும்.

    எலுமிச்சை சாற்றினை இளம் சூடுள்ள நீரில் கலந்து, பாதங்களை வாரத்திற்கு ஒரு முறை, சுமார் 10 நிமிடங்கள் கழித்த பின்னர் கழுவினால் பாதங்களானது மென்மையாகும்.

    தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணையை சமமான அளவில் எடுத்து., மஞ்சளுடன் சேர்த்து பாதத்தில் தடவினால்  பித்த வெடிப்பானது உடனடியாக நீங்கும். மேலும், நமது பாதத்திற்கு ஏற்ற வடிவம் மற்றும் அளவில் இருக்கும.

     காலணிகளை அணிவது, பாதத்தில் ஈரத்தன்மை இல்லாத அளவில் உலர்த்துவது போன்றவதை செய்யலாம். எளிமையான முறையாக இரவில் உறங்குவதற்கு முன்னதாக கால்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்து உறங்கினாலே போதுமானது.

    முதலில் காலை ஸ்க்ரப் கொண்டு தேய்த்து கொள்ளவும். அதன்பின் எலும்பிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அதனை காலில் தேய்த்துக்கொள்ளவும். பிறகு ஒரு அகலமான பிளாஸ்டிக் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் 2 டேபிள்ஸ்பூன் சோடா உப்பை சேர்த்து அதன் பின் சாதா உப்பு, ஷாம்பூ சேர்த்து கலந்துகொள்ளவும். அதில் காலை வைத்து 15 நிமிடம் அப்படியே விட்டு விடவும். இதனால் காலில் உள்ள அழுக்குகள் இறந்த செல்கள் அகற்றபடும்.

    பிறகு காலை துடைத்து விட்டு ஒரு பவுலில் சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து  அதனை கால் முழுவதும் நன்கு மசாஜ் செய்வது போல தடவ வேண்டும். பின்னர் அதனை ஒரு துணியால் துடைத்து பிளாஸ்டிக் கவரை காலில் கட்டி அதன் மேல் காலுறை அணிந்து தூங்க வேண்டும். காலை எழுந்ததும் அவற்றை கழட்டி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

    மேலும் மருதாணி இலை மற்றும் மஞ்சள்கிழங்கு இந்த இரண்டையும் அரைத்து காலில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை  வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தாலும் பாத வெடிப்பு நீங்கும்.

    ×