என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஃபேஸ் மாஸ்க்"
- 'பெடிக்யூர்' செய்வதற்கு பியூட்டி பார்லர் தான் செல்ல வேண்டும் என்பதில்லை.
- பெடிக்யூர் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
கால் விரல் நகங்களை அழகாக பராமரிக்கும் 'பெடிக்யூர்' செய்வதற்கு அழகு நிலையம் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்த படியேகூட அதை மேற்கொள்ளலாம். அது எவ்வாறு என்று பார்ப்போம்...
முதலில் பாதங்களைச் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான பக்கெட்டில் வெதுவெதுப்பான நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பாதியளவு ஊற்றினாலே போதுமானது. அந்த நீரில் சிறிதளவு உப்பு, பாதி எலுமிச்சை சேர்த்துக் கலந்து, அதில் பாதங்களை 20நிமிடம் வைக்க வேண்டும்.
நீரில் உள்ள உப்பு, கால்களில் உள்ள அழுக்குகள், நுண்ணுயிர்கள் போன்றவற்றை நீக்குகிறது. சருமத்தை மென்மையாக்குகிறது. பின்னர் பிரஷ் வைத்து பாதங்களை சுத்தம் செய்ய வேண்டும்.
20 நிமிடங்கள் கழித்து, பாதங்களில் ஈரம் இல்லாமல் துடைத்துவிட வேண்டும். கால் விரல் நகங்களில் நெயில் பாலீஷ் போட்டிருந்தால், நெயில் பாலீஷ் ரிமூவர் மூலம், பழைய நெயில் பாலீஷை அகற்ற வேண்டும். நகங்கள் சற்று நீளமாகவோ அல்லது சீரற்ற முறையில் இருந்தாலோ, நெயில் கட்டர் மூலம் வெட்டிவிடலாம்.
அடுத்து பியூமிஸ் ஸ்டோனை வைத்து, குதிகால் உள்ளிட்டவற்றை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். அழுக்குகள் நீங்கும்வரை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் பாதங்களை கழுவிக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, 'ஸ்கிரப்பிங்' செய்ய வேண்டும். அதற்கு, ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 4 ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த திரவத்தை கால் விரல்கள் மற்றும் உள்ளங்கால்களில் தேய்த்து, 5 நிமிடத்துக்குப் பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்.
கடைசியாக, உங்களுக்கு விருப்பமான மாய்சரைசரை கால்களில் தடவி, உலரவிடவேண்டும். இப்போது உங்களுக்குப் பிடித்த நெயில் பாலீஷை நகங்களில் போட்டுக்கொள்ளலாம். இப்போது உங்கள் கால் பாதங்களைப் பாருங்கள். உங்களுக்கே ரசிக்கத் தோன்றும்.
இதுபோல பெடிக்யூர் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படாது. பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படாது. இறந்த செல்கள் அகற்றப்படும். பாதங்கள் சுத்தமாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்