search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழல்வாதிகள்"

    • பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான் என்று மீரட்டில் நடந்த தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசினார்
    • போட்டோ ஷூட், ட்ரைலர், டீசர், ஆடியோ லாஞ்ச் எல்லாம் பண்ணுவதற்கு, இந்திய மக்களின் வாழ்க்கை என்ன சினிமா படமாக தெரிகிறதா பிரதமர் மோடிக்கு?

    பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான்; கடந்த 10 ஆண்டுகளில் சாத்தியமற்றதாக கருதப்பட்ட விஷயங்களை சாத்தியமாக்கி இருக்கிறோம். ஊழல்வாதிகள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று மீரட்டில் நடந்த தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசினார்.

    இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில்,

    "10 ஆண்டு ஆட்சி ட்ரெயிலர் என்கிறார். போட்டோ ஷூட், ட்ரைலர், டீசர், ஆடியோ லாஞ்ச் எல்லாம் பண்ணுவதற்கு, இந்திய மக்களின் வாழ்க்கை என்ன சினிமா படமாக தெரிகிறதா பிரதமர் மோடிக்கு?

    வெற்று கதைகளை பேசுவதற்கு பதிலாக கறுப்புப் பணத்தை ஒழித்துவிட்டேன் என்று சொல்வாரா மோடி?

    20 கோடி வேலை வாய்ப்பை உருவாக்கினேன் என்று சொல்வாரா மோடி?

    நாட்டிலேயே அமித்ஷாவின் உள் துறை தான் ஊழல் மிக்க துறை, இதை வைத்துக்கொண்டு ஊழலை ஒழித்து விட்டேன் என்று சொல்வாரா மோடி?

    இந்திய மக்கள் ட்ரெயிலரையும், ப்ரிவ்யூ ஷோவையும் எதிர்பார்க்கவில்லை. வளர்ச்சிக்கான ஆட்சியை தான் எதிர்பார்த்தனர். ஆனால் அதை உங்களால் தரமுடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளீர்கள். கடந்த 10 ஆண்டுகளில், அனைத்து தளங்களிலும் இந்தியா தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. ஊழல் தலைவிரித்தாடும் இந்த பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×