என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முடி உதிர்வை தடுக்க உதவும் பழங்கள்"
- பழங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
- சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாததும் ஒரு காரணம்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை டயட்டில் சேர்ப்பதால், அவை உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டும் தருவதில்லை, சருமம் மற்றும் கூந்தலுக்கும் தான் ஆரோக்கியத்தை தருகிறது. மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது, மட்டுமின்றி, அவற்றை அழகுப் பொருளாகவும், சருமம் மற்றும் கூந்தலுக்கும் பயன்படுத்தலாம்.
இத்தகைய சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு நிறைய பழங்கள் பயனுள்ளவையாக உள்ளன. உதாரணமாக, மிகவும் பிரபலமான வாழைப்பழம் கூந்தலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. அதேபோன்று காய்கறிகளில் பசலைக் கீரை, ப்ராக்கோலி மற்றும் கேரட் போன்றவையும் கூந்தலுக்கு மிகவும் நல்லது.
தற்போது கூந்தல் உதிர்தல் பிரச்சனை அதிகமாக உள்ளது. இவற்றிற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுகள் மட்டுமின்றி, சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாததும் ஒரு காரணம். எனவே இத்தகைய கூந்தல் உதிர்தலைத் தடுப்பதற்கு, பழங்களில் எவை பயன்படுகின்றன என்று ஒருசில பழங்களை பட்டியலிட்டுள்ளோம்.
நெல்லிக்காய்
நெல்லிக்கால் கூந்தல் வளர்ச்சிக்கான பொருள் நிறைந்துள்ளது. மேலும் தலையில் பொடுகு உள்ளவர்கள், நெல்லிக்காய் சாற்றுடன், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முடியின் வேர்கால்களில் படும் படியாக தேய்த்து ஊற வைத்து குளித்தால், பொடுகுத் தொல்லையோடு, கூந்தல் உதிர்தல் பிரச்சனையும் நீங்கும்.
அவகேடோ
அவகேடோவின் நன்மைகளை சொல்லித் தான் தெரியுமா என்ன? அவகேடோ சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் பெரிதும் நன்மையைத் தருவதாக உள்ளது. அதிலும் ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. அதற்கு அவகேடோ பழத்தை அரைத்து, அத்துடன், வெந்தயப் பொடி, சிறிது க்ரீன் டீ மற்றும் சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து, தலையில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தை மசித்து, அதனை கூந்தலில் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் பட்டு போன்றும் மிருதுவாக இருக்கும்.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ அதிகம். எனவே கொய்யாப்பழத்தை அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.
பப்பாளி
கூந்தலை பராமரிக்க சிறந்த பழங்களில் பப்பாளியும் ஒன்று. அதற்கு பப்பாளியின் ஜூசை, பால் மற்றும் தேனுடன் கலந்து, ஸ்கால்ப்பில் தடவினால், ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகள் மட்டுமின்றி, கூந்தல் உதிர்தலும் நீங்கும்.
ஆரஞ்சு
சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான இனிப்புச் சுவையுடைய ஆரஞ்சு பழங்கள் கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். அதற்கு ஆரஞ்சு பழத்தின் சாற்றினை தலையில் ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், நல்ல பலனைப் பெறலாம்.
பெர்ரிஸ்
இந்த அடர்ந்த நிறமுடைய பழங்கள் கூந்தல் உதிர்தலை தடுக்கவும், கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கவும் உறுதுணையாக உள்ளது. எப்படியெனில் இதில் உள்ள பயோஃப்ளேவோனாய்டுகள், ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, மயிர்கால்களை வலுவாக்கி, கூந்தல் உதிர்தலை தடுக்கின்றன.
செர்ரி
செர்ரி பழங்களிலும், கூந்தல் உதிர்தலை தடுக்கும் பளோஃப்ளேவோனாய்டுகள் இருக்கின்றன.
ப்ளம்ஸ்
நல்ல ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? அப்படியெனில் கூந்தலைப் பராமரிக்க ப்ளம்ஸ் பயன்படுத்த வேண்டும். அதிலும், ப்ளம்ஸ் வைத்து, ஹேர் மாஸ்க் போட்டால், கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.
பீச்
பொதுவாக பீச் பழம் ஸ்கால்ப் பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் ஒரு பொருள். அதிலும் ஸ்கால்ப்பானது சுத்தமாக இல்லாமல், பொடுகுத் தொல்லை இருந்தால், கூந்தல் உதிர்தல் ஏற்படும். எனவே இதற்கு ஒரே சூப்பரான தீர்வு என்றால், அது பீச் ஹேர் மாஸ்க் தான்.
பம்பளிமாஸ்
வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள சிட்ரஸ் பழங்களில் பம்பளிமாஸ் பழத்தின் சாற்றினை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், தலையில் ரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தல் உதிர்தலும் நீங்கும்.
எலுமிச்சை
எலுமிச்சையில் நிறைய கூந்தலுக்கான நன்மைகள் உள்ளன. அதிலும் எலுமிச்சை சாற்றினை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், கூந்தல் உதிர்தல் நிற்பதோடு, பொடுகுத் தொல்லை, வறட்சியான ஸ்கால்ப் போன்றவை தடைப்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்