என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரீரிலீஸ்"

    • பிரபல நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம் இந்தியன். 1996 -ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியானது
    • தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார்.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம் இந்தியன். 1996 -ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு விழிப்புணர்வு நிறைந்த அதிரடி படமாகும். இதில் கமல் 'சேனாபதி' என்ற வயதான சுதந்திரப் போராட்ட வீரராக நடித்தார்.

    ஊழலுக்கு எதிராக போராடிய சேனாதிபதி இந்தியாவை விட்டு ஓடிப்போய் ஹாங்காங் செல்வதுடன், ஊழல் எப்போதாவது திரும்பினால் திரும்பி வருவேன் என்று மிரட்டுவதுடன் 'இந்தியன்' முதல் பாகம் முடிந்தது.

    இந்நிலையில் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்பட பணிகள் முடிவடைந்து வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக தயாராகவுள்ளது. படத்தின் முதல் பாடலானா 'பாரா' சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில் அப்படத்தின் பாகம் 1 மீண்டும் ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர். இந்தியன் திரைப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ளது.

    28 ஆண்டுகளுக்கு பிறகு ரிரீலிஸ் செய்யப்படும் இத்திரைப்படத்தை பார்க்க மக்களிடையே ஆர்வம் உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'துப்பாக்கி'.
    • துப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

     துப்பாக்கி' படத்தில் விஜய்யின் வாழைப்பழ காமெடி.. வைரலாகும் வீடியோ

    ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'துப்பாக்கி'. விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாகவும் துப்பாக்கி அமைந்தது. விடுமுறையில் ஊருக்கு வரும் ராணுவ வீரன் மும்பை நகருக்குள் ஸ்லீப்பர் செல்களாக இயங்கும் தீவிரவாதிகளுடன் மோதும் கதைக்களத்தை கொண்ட இப்படம் எந்த இடத்திலும் லேக் ஆகாமல் விறுவிறுப்பாக செல்லும்.

     

    விஜய்க்கும் கதாநாயகி காஜல் அகர்வாலுக்குமான கெமிஸ்ட்ரி கச்சிதமாக பொருந்தியிருக்கும். சீரியஸான கதைக்களம் என்றாலும் விஜய்யின் சிறு சிறு மேனரிசம்களும் டயலாக்களும் அவ்வப்போது மெல்லிய சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். அந்த வகையில் துப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

    தமிழ் சினிமாவின் கிளாசிக் படமான கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி செந்திலின் பல காமெடி காட்சிகள் டிரெண்ட்செட்டர்களாக மாறின. அதில் ஒன்று வாழைப்பழ காமெடி. பணம் கொடுத்து செந்திலை 2 வாழைப்பழம் வாங்கி வர சொல்வார் கவுண்டமணி. ஆனால் செந்தில் 2 பழத்தை வாங்கி அதில் ஒன்றை வரும் வழியிலேயே சாப்பிட்டு விடுவார். கவுண்டமணி 1 பழம் மட்டுமே இருப்பதை பார்த்துவிட்டு மற்றோரு பழம் எங்கே என கேட்பார். அதற்கு செந்தில் அது தான் அண்ணே இது என கூற அங்கு களேபரமே ஏற்பட்டுவிடும்.

     

    தற்போது வெளியாகி உள்ள துப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சியில் இந்த காமெடியை கதைப்படி மும்பையில் தனது நண்பன் வேலை பார்க்கும் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளவர்களுக்கு ஹிந்தியில் மிமிக்கிரி செய்து சிரிக்க வைக்கிறார் ஜெக்தீஷ். அதாவது கதைப்படி ஜெக்தீஷாக நடிக்கும் விஜய். இந்த டேலிட்டட் காட்சிகள் வைரலான நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார்.

    இதற்கிடையில் ஜூன் 22 விஜய் பிறந்தநாள் வர உள்ள நிலையில் ஜூன் 21 ஆம் தேதி துப்பாக்கி படம் ரீரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது
    • ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் இந்த படம் சிறப்பு திரையிடல் செய்யப்படும்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை சொக்கவைத்த படம் விண்ணைத் தாண்டி வருவாயா. பின்னணியில் ஏஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் - ஜெஸியின் காதல் ரசிகர்களைப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் கழித்தும் கட்டிப் போட்டுள்ளது.

    காதலிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் பட்டியலில் விண்ணைத் தாண்டி வருவாயா நிச்சயம் இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் இந்த படம் சிறப்பு திரையிடல் செய்யப்படும். குறிப்பாகச் சென்னை பிவிஆர் விஆர் (pvr vr mall) திரையில் ரீரிலீஸ் ஆகி இப்படம் இன்றுடன் 1000-வது நாளைக் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.

     

    பிவிஆர் திரையில் கடந்த 142 வாரங்களாக [2.75 ஆண்டுகளாக] இப்படம் ஒரு காட்சியாவது திரையிடப்பட்டு வருகிறது. இந்திய அளவில் ரீரிலீசில் அதிக நாள்களைக் கடந்த திரைப்படம் என்ற சாதனையை தனதாகியுள்ளது விண்ணைத் தாண்டி வருவாயா.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 16 ஆண்டுகளுக்குப் பிறகு தாம் தூம் திரைப்படம் நாளை திரையில் மீண்டும் வெளியாக இருக்கிறது.
    • தமிழ்நாடு முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட திரையரப்பட்ட உள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜெயம் ரவியின் பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது. அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தாம் தூம்.

    இதில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கங்கனா ரனாவத் நடித்திருந்தார். மேலும், ராய் லட்சுமி, ஜெயராம், ஶ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆக்ஷன் மற்றும் ரொமாண்டிக் கலந்த இந்த படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. குறிப்பாக, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் பரவி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கி இருந்தார்.

    16 ஆண்டுகளுக்குப் பிறகு தாம் தூம் திரைப்படம் நாளை திரையில் மீண்டும் வெளியாக இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட திரையரப்பட்ட உள்ளது.

    தாம் தூம் திரைப்படம் நாளை ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ள நிலையில், ஜெயம் ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " எவர்கிரீன் என்டர்டெயின்னராஜ தாம் தூம் நாளை திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் ஆவதில் மகிழ்ச்சி.

    உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் திரைப்படத்தை கண்டு மகிழுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 1995ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் 'பாட்ஷா'.
    • படத்தில் இடம் பெற்ற பாடல்கள், தேவாவின் பின்னணி இசை பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது.

    1995ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் 'பாட்ஷா'. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் 'பாட்ஷா'. இந்த படம் 2017-ம் ஆண்டு மீண்டும் டிஜிட்டலாக ரீஸ்டோர் செய்து வெளியிடப்பட்டது.

    சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் தாதாவாக மாறுவதும் பிறகு அதில் இருந்து விலகி ஊருக்கு சென்று ஆட்டோ ஓட்டி பிழைப்பதும் அங்கும் சில பிரச்சினைகளை எதிர்கொள்வதையும் திரைக்கதையாக அமைத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக ரகுவரன் நடித்திருந்தார். ரகுவரன் ஏற்று நடித்திருந்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் இன்று ரசிகர்கள் மாஸ் வில்லனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

    படத்தில் இடம் பெற்ற பாடல்கள், தேவாவின் பின்னணி இசை பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது. இன்றுவரை மக்களால் கேட்கப்பட்டு வருகிறது. திரைப்படத்தில் இடம் பெற்ற வசனங்கள், ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி. மாணிக் பாஷா, மார்க் ஆண்டனி என இன்றும் டிரேட் மார்க் வசனமாக அமைந்துள்ளது.

    இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, பாட்ஷா படம் 30 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து பேசினார். அதாவது "படம் 4கே டிஜிட்டல் வடிவத்தில், டால்பி அட்மாஸ் சவுண்ட் தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் பாட்ஷா படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.
    • பரத்வாஜ் இசையில் பா.விஜய் எழுதி கே.எஸ்.சித்ரா பாடிய ஒவ்வொரு பூக்களுமே பாடல் 3 தேசிய விருதுகளை வென்றது.

    பிரபல இயக்குனர் சேரனின் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளமை பருவங்களில் ஹீரோ சந்தித்த காதல் அனுபவங்களை அழகாக சொல்லியிருப்பார்.

    மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

    இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட். பரத்வாஜ் இசையில் பா.விஜய் எழுதி கே.எஸ்.சித்ரா பாடிய ஒவ்வொரு பூக்களுமே பாடல் 3 தேசிய விருதுகளை வென்றது.

    இந்நிலையில், 21 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோகிராப் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரசிகர்களின் மனதில் நீங்க இடம்பெற்ற இந்த படத்தை மீண்டும் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

    ஆட்டோகிராப் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக இருப்பதை முன்னிட்டு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏஐ வீடியோ ஒன்றை வெளியட்டுள்ளார்.

    அதில், ஆட்டோகிராப் படத்தில் நடித்துள்ள சேரன், கோபிகா, சினேகா உள்ளிட்ட கதாப்பாத்திரங்கள் ஏஐ வடிவில் இடம்பெற்றுள்ளனர்.

    ×