search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒய்எஸ்ஆர்"

    • வெங்கடேசலு வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தனது தாயாரை தாக்கினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் வைசிபள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுங்கம்மா (வயது 52). இவருடைய மகன் வெங்கடேசலு.

    நேற்று முன்தினம் ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்திற்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் எந்த காரணத்தைக் கொண்டும் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு வாக்களிக்க கூடாது என வெங்கடேசலு அவரது தாயாரிடம் கூறினார்.

    ஆனால் சுங்கம்மா இதனை கண்டு கொள்ளவில்லை. தேர்தல் அன்று சுங்கம்மா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்த வாகனத்தில் ஏறி வாக்களிக்க சென்றார்.

    பின்னர் அவர் வீடு திரும்பினார். இதனால் தாயின் மீது வெங்கடேசலு கடும் கோபத்தில் இருந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்த வெங்கடேசலு அவரது தாயிடம் எந்த கட்சிக்கு வாக்களித்தீர்கள் என கேட்டார்.

    அப்போது அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு மக்கள் நலத் திட்டங்களை நன்றாக செய்துள்ளது. இதனால் அந்த கட்சிக்கு ஓட்டு போட்டேன் என்றார்.

    இதனால் ஆத்திரம் உச்சத்திற்கு ஏறிய வெங்கடேசலு வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தனது தாயாரை தாக்கினார்.

    இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சுங்கம்மா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை கண்டதும் வெங்கடேசலு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் .

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் தூண்டுதலின் பேரில் வாலிபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக அங்குள்ள கிராம மக்கள் தெரிவித்தனர்.

    கம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    இதேபோல ஏலூர் மாவட்டம் விஜயாரை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வம்சி. தெலுங்கு தேசம் கட்சி தொண்டரான இவர் தேர்தலில் அந்தக் கட்சிக்காக கடுமையாக வேலை பார்த்தார். தேர்தல் முடிந்த நிலையில் நேற்று அவருடைய குடும்பத்தினரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டார்.

    அப்போது அவருடைய தந்தை பென்டையா மற்றும் தாய், சகோதரி ஆகியோர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு வாக்களித்தோம் என பதில் அளித்தனர். இதனால் வெறிபிடித்த வம்சி இரும்பு கம்பியால் தந்தை தாய் மற்றும் தங்கையை தாக்கினார்.

    அப்போது அவருடைய தந்தை நான் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர். அதனால் அந்த கட்சிக்கு வாக்களித்தேன் என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    ஆனாலும் தந்தை என்று கூட பார்க்காமல் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கினார். அக்கம் பக்கத்தினர் சென்று இதனை தடுத்து நிறுத்தினர். காயம் அடைந்த பென்டையா மற்றும் அவருடைய மனைவி மகள் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் 17 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது
    • ஆந்திர மாநிலம் காக்கிநாடா தொகுதியில் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.எம்.பள்ளம் ராஜூ போட்டியிடுகிறார்

    பாராளுமன்ற தேர்தலில் 17 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது.

    இந்த வேட்பாளர் பட்டியலில் ஒடிசாவில் இருந்து 8 வேட்பாளர்கள், ஆந்திராவில் இருந்து 5 பேர், பீகாரில் இருந்து 3 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து ஒருவர் இடம் பெற்றுள்ளனர்.

    ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா கடப்பா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்பி முகமது ஜாவேத்தும், கதிஹார் தொகுதியில் மூத்த தலைவர் தாரிக் அன்வரும், பகல்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ அஜீத் சர்மாவும் போட்டியிடுகின்றனர்.

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா தொகுதியில் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.எம்.பள்ளம் ராஜூ போட்டியிடுகிறார். ஒடிசாவின் பர்கர் தொகுதியில் முன்னாள் எம்.பி சஞ்சய் போய் போட்டியிடுகிறார்.

    ×