என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பர்த் டே பார்ட்டி"

    • பிறந்தநாள் பார்ட்டியின் போது நடிகர் அஜித்துக்கு நடராஜன் கேக் ஊட்டினார்
    • முக்கிய நடிகர்களுடன் கிரிக்கெட் வீரர் நடராஜன் நல்ல நட்பில் இருந்து வருகிறார்.

    இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாடி வருகிறார். நாளை ( 5- ந்தேதி)  சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான போட்டிக்காக அவர் ஐதராபாத்தில் உள்ளார்.

    இந்நிலையில் இன்று நடராஜன் தனது 33-வது பிறந்தநாளை பிரபல நடிகர் அஜித் குமாருடன் கேக் வெட்டி ஐதராபாத்தில் கொண்டாடினார்.

    பிறந்தநாள் பார்ட்டியின் போது நடிகர் அஜித்துக்கு நடராஜன் கேக் ஊட்டினார். இருவரும் மாறி, மாறி கேக் ஊட்டி மகிழ்ந்தனர். பிறந்தநாள் பார்ட்டியின் போது அஜித் - நடராஜன் இருவரும் வெள்ளை நிற உடையில் இருந்தனர்.



    அப்போது இலங்கையைச் சேர்ந்த பிரபல சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் உடனிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுடன் கிரிக்கெட் வீரர் நடராஜன் நல்ல நட்பில் இருந்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் வெளியாகின.

    தற்போது பிரபல நடிகர் அஜித், நடராஜனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×