என் மலர்
நீங்கள் தேடியது "-அல்லு அர்ஜுன்"
- இந்நிலையில் புஷ்பா- 2 'டீசர்' நாளை ( 8- ந் தேதி) வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
- வருகிற ஆகஸ்ட் 15 - ந்தேதி திரையரங்குகளில் புஷ்பா- 2 படம் 'ரிலீஸ்' செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், 'புஷ்பா தி ரைஸ்'.பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து, இதன் அடுத்த பாகம் புஷ்பா- 2 தி ரூல் படம் தற்போது உருவாகி வருகிறது.
இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் சுகுமார் இதனை இயக்கி வருகிறார். 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' இப்படத்தை தயாரித்து வருகிறது.இப்படத்துக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லி கதாபாத்திர தோற்றத்தை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. அதில் முதல் பாகத்தைக் காட்டிலும் சற்று வித்தியாசமான தோற்றத்தில் அவர் காணப்படுகிறார்.

இந்நிலையில் புஷ்பா- 2 'டீசர்' நாளை ( 8- ந் தேதி) வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. வருகிற ஆகஸ்ட் 15 - ந்தேதி திரையரங்குகளில் புஷ்பா- 2 படம் 'ரிலீஸ்' செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது
- புஷ்பா திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் 1002 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.
முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.
'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்தியன் சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் புஷ்பா திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் 1002 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிவேகமாக 1000 கோடி வசூலை கடந்த முதல் திரைப்படம் என்ற சாதனையை புஷ்பா 2 படைத்துள்ளது.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று விழா நடந்தது அதில் பேசிய அல்லு அர்ஜூன் "1000 கோடி ரூபாய் என்பது மக்கள் என் மீது வைத்துள்ள அன்பை குறிக்கிறது. 1000 கோடி என்பது நிரந்தரமல்ல , மக்களின் அன்பு ஒன்று மட்டுமெ நிரந்தரம். இந்த அன்பை நான் என்றும் மறக்க மாட்டேன். இந்த ரெக்கார்ட் விரைவில் முறியடிக்க வேண்டும். அது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழி திரைப்படங்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் இந்த சாதனையை உடைக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே திரைத்துறை வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என அர்த்தம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'.
- திரைப்படம் உலகளவில் 1500 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.
பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.
'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்தியன் சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது. தற்போது வரை திரைப்படம் உலகளவில் 1500 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
இந்நிலையில் திரைப்படம் இந்தி மொழியில் மட்டும் 645 கோடி ரூபாய் 16 நாட்களில் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த திரைப்படமும் இந்தி மொழியில் இவ்வளவு வசூலித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ஸ்ரீ 2 , ஜவான், பதான், பாகுபலி 2, அனிமல் மற்றும் கேஜிஎஃப் 2 திரைப்படங்களின் இந்தி வசூலைவிட இப்படம் அதிகமாக வசூலித்துள்ளது.
இதனால் புஷ்பா 2 இந்தி மொழியில் மட்டும் 3டி தொழில்நுட்பத்துடன் படக்குழு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.