search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு பெண்"

    • பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது சோப்பினால் தவறி விழுந்து கீழே விழ முற்பட்டபோது, ​​மொட்டை மாடியின் கம்பியை பிடித்துக்கொண்டார்.
    • அந்தப் பெண் உடனடியாக மீட்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

    பெங்களூருவில் பெண் (27) ஒருவர் வீட்டு மொட்டை மாடியில் துணி துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது கணவரும் மாடியில் இருந்துள்ளார்.

    அந்த பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது சோப்பினால் தவறி விழுந்து கீழே விழ முற்பட்டபோது, மொட்டை மாடியின் கம்பியை பிடித்துக்கொண்டார்.

    இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் அவரை மேலே இழுக்க முயன்றபோது, அந்தப் பெண் பிடியை இழந்து கீழே விழுந்தார்.

    அக்கம்பக்கத்தினர் மற்றும் பல உள்ளூர்வாசிகளின் உதவியுடன் அந்தப் பெண் உடனடியாக மீட்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பெண் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து டிஜே ஹாளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெங்களூருவைச் சேர்ந்த நேஹா திவேதி ஆர்சிபி அணியின் தீவிர ரசிகை.
    • இவர் ஆர்சிபி, லக்னோ அணிகளுக்கு இடையிலான மேட்ச் பார்க்க விரும்பினார்.

    பெங்களூரு:

    பெங்களூருவைச் சேர்ந்த நேஹா திவேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தீவிர ரசிகை ஆவார்.

    கடந்த 2ம் தேதி பெங்களூருவில் நடந்த ஆர்சிபி, லக்னோ அணிகளுக்கு இடையிலான மேட்ச் பார்க்க விரும்பினார். அலுவலகத்தில் இருந்த அவர் அவசர அவசரமாக பேமிலி எமர்ஜென்சி என மேனேஜருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு புறப்பட்டார். அவர் கேட்ட பர்மிஷனை உண்மை என நம்பிய மேனேஜர் அவரை வீட்டுக்கு அனுப்பினார்.

    சில மணி நேரத்தில் தற்செயலாக டிவியைப் பார்த்த மேனேஜர் அதிர்ச்சி அடைந்தார். நேஹா திவேதி ஐபிஎல் போட்டியைப் பார்க்க தான் இப்படி அவசரமாக சென்றார் என்பது தெரியவந்தது.

    டி.வி.யில் நேஹாவைக் கண்ட மேனேஜர், நேஹா நீங்கள் ஆர்சிபி விசிறியா என கேட்க, அவர் ஆமாம் என கூறியிருக்கிறார். அப்போது உங்களை டி.வி.யில் சோகமான முகத்துடன் பார்த்தேன் என்றதும்தான் நேஹாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.

    இதுதொடர்பான கலந்துரையாடல் ஸ்க்ரீன்ஷாட்டை நேஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த ரீல்ஸ் பதிவு 2 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. 4 ஆயிரம் பேர் இதை லைக் செய்திருக்கின்றனர்.

    தில்லுமுல்லு படத்தில் ரஜினிகாந்த் லீவு போட்டு மேட்ச் பார்க்கச் சென்ற சம்பவம் போல் இருப்பதாக வலைதளத்தில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

    ×