என் மலர்
நீங்கள் தேடியது "அஞ்சு குரியன்"
- இந்த திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
- இது உண்மை திருமணமா? அல்லது நகை வியாபார கடை விளம்பர படமா ? என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பிரபல சினிமா நட்சத்திரங்கள் ரகுல்ப்ரீத்சிங் - ஜாக்கி பக்னானி, புல்கித் சாம்ராட் - கிருத்தி கர்பண்டா ,மற்றும் டாப்ஸி பன்னு - பாட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ உள்ளிட்டோர்,
கடந்த சில மாதங்களில் காதல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் சித்தார்த் - அதிதிராவ் ஜோடியினர் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்,
இந்நிலையில் தமிழ் நடிகர் தர்ஷன் மற்றும் அவருடன் நடித்த அஞ்சு குரியன் ஜோடி காதலித்து வருவதாக கூறப்படுகிறது. "கனா" படம் வெற்றி மூலம் சிறந்த நடிகராக தர்ஷன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

"இக்லூ" படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற அஞ்சு இருவரும் ரகசிய திருமணம் செய்ததாக வதந்தி பரவி வருகிறது. இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
இந்த திருமண படங்களில், தர்ஷன் ஒரு கிரீம் சட்டை மற்றும் வேட்டி அணிந்துள்ளார். அஞ்சு சிவப்பு மற்றும் தங்கநிற சேலை அணிந்துள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் பங்கேற்றதாகவும் செய்தி பரவியது.
மேலும் இது நகை பிராண்ட் விளம்பர படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியானது.

இந்த புகைப்படங்களுக்கு பின் உள்ள உண்மை குறித்து ரசிகர்கள் தொடர்ந்து ஊகிக்கிறார்கள். மேலும் இவர்களிடமிருந்து உறுதிப்படுத்தலை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
இது உண்மை திருமணமா? அல்லது நகை வியாபார கடை விளம்பர படமா ? என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் தர்ஷன் - அஞ்சு உண்மை காதலர்கள் போன்று பல இடங்களில் ஒன்றாக சேர்ந்து சுற்றி வருவதாக கூறப்படுவதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.