search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள்"

    • ராணிப்பேட்டையில் இடம் தேர்வு செய்யப்பட்டு 190 ஹெக்டேர் பரப்பளவில் தொழிற்சாலையை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • இந்த ஆலைக்கு செப்டம்பர் 28-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி இருந்தார்.

    சென்னை:

    இந்தியாவில் பிரீமியம் வகை கார்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படும் நிலையில், தமிழ்நாட்டிலேயே ஜாகுவார் லேண்ட்ரோவர் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ராணிப்பேட்டையில் இடம் தேர்வு செய்யப்பட்டு 190 ஹெக்டேர் பரப்பளவில் தொழிற்சாலையை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 5 ஆண்டுகளில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கார் தொழிற்சாலையை அமைக்க ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

    இப்போது முதல்கட்டமாக ரூ.914 கோடியில் தொழிற்சாலைக்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு ஜாகுவார் லேண்ட்ரோவர் வகை கார்களை உற்பத்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆலைக்கு செப்டம்பர் 28-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி இருந்தார்.

    இதைத் தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

    இந்த ஆலையில் முதல் கட்டமாக 1650 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை உற்பத்தி செய்ய உள்ளது.
    • ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது இது முதல் முறை ஆகும்.

    சென்னை:

    பிரபலமான சொகுசு கார்களில் ஜாகுவார் லேண்ட்ரோவர் காரும் ஒன்று.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை உற்பத்தி செய்ய உள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர் மாநாட்டில் டாடா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி டாடா மோட்டார்ஸ் ராணிப்பேட்டையில் ஆலை அமைக்க உள்ளது.

    ராணிப்பேட்டையில் புதிதாக அமையும் டாடா மோட்டார்ஸ் ஆலையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள் தயாரிக்கப்படும். வாகன தொழிற்சாலை அமைவதன் மூலம் சொகுசு கார்களின் உற்பத்தி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாகும்.

    ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை தமிழ்நாட்டில் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இங்கு தயாராகும் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×