search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.எஸ் பாஸ்கர்"

    • இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார்.

    கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் போட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இக்கதை சூழல் 80 வருடங்களுக்கு முன் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு,  மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க பதுங்குகிறார்கள்.

    இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யதார்த்த நாயகன்' விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
    • இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார்.

    யதார்த்த நாயகன்' விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார். கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை எம் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

     

    இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், இயக்குநர் சலீம் திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன் வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றினார். எனக்கு அவர் ஆட்டோ ஓட்டுநராகத்தான் அறிமுகமானார். அப்போதே சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்றும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் ஆட்டோ ஓட்டும் தொழிலை நேர்மையாக செய்தார். இவரது நேர்மை குறித்து பல செய்தித்தாள்களில் புகைப்படத்துடன் செய்தியும் வெளியாகி இருக்கிறது.

     

    நாயகன் விதார்த் பேசுகையில், ''நாயகன் போலீஸ் என்று சொன்னவுடன் மூன்று மாதம் நேரம் ஒதுக்குங்கள், உடலை முறுக்கிக் கொண்டு வருகிறேன் என்றேன். இதற்கு இயக்குநர் அந்த கதாபாத்திரம் பொதுமக்களின் பிரதிநிதி. அதனால் நீங்கள் இப்போது இருக்கும் தோற்றத்திலேயே வாருங்கள் என்றார்.

    லாந்தர் திரைப்படம் வரும் ஜூன் 21 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது.

    இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. காமெடியாகவும் 'இது எல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால்.. இந்தி தெரியாது போயா' போன்ற இந்தி திணிப்புக்கு எதிராக இடம்பெற்று அழுத்தமான வசனங்கள் டீசரில் இடம் பெற்றது.

    இப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம்.எஸ் பாஸ்கர், தேவ தர்ஷினி மற்றும் பலர்  நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனரான சுமன் குமார் இதற்கு முன் ஃபேமிலி மேன் என்ற பிரபல வலைத் தொடருக்கு கதையாசிரியாவார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் தற்பொழுது அட்லி இயக்கத்தில் உருவாகும் தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தின் வருன் குமாருக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண்
    • இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்தார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் கடந்த ஆண்டு வெளியாகிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய 'பார்க்கிங்' படத்தில் நடித்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரை வாங்கியது பார்க்கிங் திரைப்படம்.

    திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்தார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. ராம்குமார் பாலகிருஷ்ணன் முன்பு 'பலூன்' படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்தார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இதற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்தார்.

    ஒரு ஐடி இளைஞனும், அரசாங்க ஊழியரும் ஒரே குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அந்த வீட்டில் இருப்பது ஒரே ஒரு பார்க்கிங் ஸ்லாட் மட்டும் தான். அதில் யார் காரை நிறுத்துவது என்பதை மையமாக வைத்து இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார். ஒரு தனிமனித ஈகோ எந்த எல்லை வரைக்கும் செல்லும் என இப்படம் தெளிவாக காட்சி படுத்தி இருக்கும், படத்தின் திரைக்கதை மிகவும் சுவாரசியமாக எழுதியுள்ளார் ராம்குமார்.

    சமீபத்தில் படித்தின் ரீமேக் ரைட்ஸை 5 மொழிகளில் வாங்கினர். இந்நிலையில் படத்தின் திரைக்கதையை ஆஸ்கர் லைப்ரரி கோர் கல்க்ஷனில் இணைக்க படத்தின் தயாரிப்பாளரை கேட்டு அகாடமியில் இருந்து மெயிலை அனுப்பியுள்ளது, இதுகுறித்து ஹரிஷ் கல்யாண் எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியை தெரிவித்து பதிவை பதிவிட்டுள்ளார்.

    அதில் ஒரு நல்ல கதை அதுக்கான இடத்த தானே தேடி போகும் என்று நன்றியை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஒரு நொடி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
    • படம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஒரு நொடி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி அர்ஜுனன் படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகரும், அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான பழ. கருப்பையா, எழுத்தாளரும், நடிகருமான வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பட குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

    "எல்லோருடைய வாழ்க்கையிலும் நடைபெறும் ஒரு நொடி. அந்த ஒரு நொடி எதைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அப்படி ஒரு நொடியில் நடைபெற்ற சம்பவம் தான் இந்த படத்தின் கதை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்," என்று தெரிவித்தார் இயக்குனர் .

    'ஒரு நொடி' படத்தில் தமன்குமார், எம்.எஸ். பாஸ்கர், வேல. ராமமூர்த்தி, பழ. கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. காணாப்போன கணவனான எம்.எஸ் பாஸ்கர் தேடி போலிசிடம் புகார் கொடுக்கிறார் மனைவி. போலிஸ் கதாப்பாத்திரத்தில் தமன்குமார் நடித்துள்ளார். அதற்கடுத்து என்ன நடந்தது என்பதே கதை. டிரெயிலர் மிக விறுவிறுப்பாக அமைந்துள்ளது. படம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×