என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சீன எல்லைப்பகுதி"
- மலையில் இருந்து மழைநீர் அருவி போல் கொட்டியதில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் பாறை மற்றும் மணல்கள் விழுந்தன.
- சீன எல்லையில் ராணுவ முகாம்களுக்கு செல்லக்கூடிய சாலை கடும் சேதமடைந்துள்ளதால் அங்கு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இட்டாநகர்:
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சீன எல்லையையொட்டி உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையையொட்டி உள்ள திபாங் பள்ளத்தாக்கை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 33-ல் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.
மலையில் இருந்து மழைநீர் அருவி போல் கொட்டியதில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் பாறை மற்றும் மணல்கள் விழுந்தன. மேலும் அந்த சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு துண்டானது. இதனால் ஹுன்லி-அனினி இடையே போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
சீன எல்லையில் ராணுவ முகாம்களுக்கு செல்லக்கூடிய சாலை கடும் சேதமடைந்துள்ளதால் அங்கு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையை சீரமைக்க மூன்று நாட்கள் ஆகும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
தற்போது வானிலை மோசமாக இருப்பதால் சீரமைப்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் தற்போது உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.