என் மலர்
நீங்கள் தேடியது "சுந்தர்சி"
- 15 வருடங்களுக்குப் பிறகு சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி இணைகிறது.
- வடிவேலு இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு நடித்துள்ளார்.
கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வடிவேலு இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில் படப்பிடிப்பில் நடந்த விஷயங்களின் நிகழ்வுகளின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அவை ரசிக்கும்படியாக உள்ளதால் ரசிகர்களில் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
- படத்தின் டிரெயிலர் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுது
- அரண்மனை 4 படம் வரும் மே 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் 'அச்சச்சோ' என்ற முதல் பாடலும் வெளியாகின.
படத்தின் டிரெயிலர் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுது. இதுவரை 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. ராஷி கண்ணாவும், தமன்னாவும் இணைந்து ஆடிய கவர்ச்சி நடனமான அச்சச்சோ பாடலும் ரசிகர்கலின் மனதை கவர்ந்தது. படம் வரும் மே 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நடிகை தமன்னா தனது எக்ஸ் பக்கத்தில் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை பகிந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அதனுடன் பகிர்ந்த பதிவில், அரண்மனை 4 படத்தில் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லா சண்டைகாட்சிகளிலும் நடித்தேன். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் சந்தோஷம். இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.