என் மலர்
நீங்கள் தேடியது "போதைப் பொருள் தடுப்புப் பிரிவு"
- மார்ச் மாதம் 12-ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
- நடப்பு ஆண்டு மட்டும் குஜராத்தில் இதுவரை ரூ.3.400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
குஜராத் கடல் பகுதியில் இன்று 173 கிலோ போதைப் பொருட்களை இந்திய கடலோர காவல் படை மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்தது.
போதைப் பொருள் கடத்தப் பயன்படுத்திய இந்திய மீன்பிடி படகில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல், நேற்று சுமார் 90 கிலோ போதைப் பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர். இதன் மதிப்பு 600 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு மட்டும் குஜராத்தில் கடலோர போலீசாரால் இதுவரை ரூ.3.400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- 3 மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்
- 149 கிலோ மெபெட்ரோன், 50 கிலோ எபிட்ரின் மற்றும் 200 லிட்டர் அசிட்டோன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்
ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 3 மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை கண்டுபிடித்து, சுமார் ₹300 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள பின்மால், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒசியான் மற்றும் குஜராத் மாநிலத்தின் காந்திநகர் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.
அதில், சம்பவ இடத்தில் இருந்து 149 கிலோ மெபெட்ரோன், 50 கிலோ எபிட்ரின் மற்றும் 200 லிட்டர் அசிட்டோன் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் இதுவரை ₹ 4,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.