என் மலர்
நீங்கள் தேடியது "அருண்விஜய்"
- இந்த படத்தின் இரண்டு நாயகிகளாக சித்தி இத்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
- சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய கிருஷ் திருக்குமரன் அருண் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார்.
2014 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய கிருஷ் திருக்குமரன் அருண் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார்.
படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.
இந்த படத்திற்கு 'ரெட்ட தல' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டு நாயகிகளாக சித்தி இத்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடிகர் அருண் விஜய்-க்கு 36 வது படமாகும்.
மான் கராத்தே திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு எப்படி ஒரு மாறுபட்ட படமாக அமைந்ததோ ரெட்ட தல திரைப்படம் அருண் விஜய்-க்கு முக்கிய திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளிவந்த நிலையில் தற்பொழுது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் இயக்கவிருக்கும் 4- வது படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
- இப்படத்தை Dawn Pictures என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன் மற்றும் துஷரா விஜயன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இது இவர் இயக்கும் 3 திரைப்படமாகும். படத்தின் பாடலான கோல்டன் ஸ்பேரோ பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது தனுஷ் இயக்கவிருக்கும் 4- வது படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் தனுஷ், அருண் விஜய் மற்றும் அசோக் செல்வன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். தனுஷ் கதாநாயகனாகவும், அருண் விஜய் வில்லனாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை Dawn Pictures என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். தயாரிப்பு நிறுவனம் இதுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இப்படம் மிகப்பெரிய பொருட் செல்வில் தயாரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் 120 கோடி ரூபாயில் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதுக்குறித்த மற்ற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான்.
- திரைப்படம் நாளை { ஜனவரி 10} ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரைப்படம் நாளை { ஜனவரி 10} ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார்.
படத்தின் முதல் பாடலான இறை நூறு மற்றும் மௌனம் போலே பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தார் அருண் விஜய்.
திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வணங்கான் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- 'வணங்கான்' திரைப்படத்தின் வெற்றியையடுத்து இயக்குநர் பாலாவுக்கு நடிகர் அருண் விஜய் நன்றி.
பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார்.
இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், 'வணங்கான்' திரைப்படத்தின் வெற்றியையடுத்து இயக்குநர் பாலாவுக்கு நடிகர் அருண் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் அருண் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கோட்டி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் பாலாவுக்கு மிக்க நன்றி. ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அனைவரின் இதயத்தையும் வென்று விட்டோம். எல்லாவற்றிற்கும் காரணம் நீங்கள்தான். எனக்குள் எவ்வளவு திறமை இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்திவிட்டீர்கள். இதற்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.