search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்டி ரேவண்ணா"

    • ஆள் கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு.
    • கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

    பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி அவற்றை வீடியோ பதிவு செய்து மிரட்டிய வழக்கில் கர்நாடகாவின் ஹசன் தொகுதி ஜேடிஎஸ் கட்சி எம்.பி-பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது கர்நாடகா போலீஸார் கடந்த மாதம் 27ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு அம்மாநில சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் வெளிவந்ததுமே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார். அவரை கைது செய்ய போலீஸார் புளூகார்னர் நோட்டீஸ் பிறப்பித்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

    பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது போலீஸில் புகார் அளித்த மைசூரு, கே.ஆர்.நகரை சேர்ந்த பெண் கடத்தப்பட்டார். இந்த விவகாரத்தில் எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு, 10 நாள் சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில், பெண் கடத்தல் வழக்கில், எச்.டி. ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    கடத்தல் வழக்கில் பவானி ரேவண்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

    பிரஜ்வால் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தயாரான பவானி ரேவண்ணாவும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • பெண் மற்றும் அவரது கணவர் மீது தேவராஜ கவுடா பெங்களூரு ஹெப்பல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு ஆஜராகாத பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புளு கார்னர் நோட்டீசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    பிரஜ்வலின் ஆபாச வீடியோக்களை, முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் என்பவர் பா.ஜ.க. பிரமுகர் வக்கீல் தேவராஜ கவுடாவிடம் கொடுத்ததாகவும், அவர் இந்த வீடியோக்களை வெளியிட்டதாகவும் தகவல்கள் பரவியது. இதை தேவரா ஜகவுடா திட்டவட்டமாக நிராகரித்தார். இதையடுத்து சிறப்பு விசாரணை குழுவினர் கார் டிரைவர் கார்த்திக், பா.ஜ.க. வக்கீல் தேவராஜ கவுடா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் அவர்கள் 2 பேருக்கும் சம்மன் அனுப்பினர். அதில் 24 மணி நேரத்தில் சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராக வேண்டும் என்று அறிவித்து இருந்தனர். இதற்கிடையே தேவராஜ கவுடா மீது ஒரு பெண் ஹோலேநரசீப் நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில் தேவராஜ கவுடா தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும், வீடியோ கால் செய்து மனரீதியாக சித்ரவதை செய்ததாக கூறியிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக ஹாசன் இரண்டாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் தேவராஜ கவுடா ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதே போல் தன் மீது புகார் செய்த பெண் மற்றும் அவரது கணவர் மீது தேவராஜ கவுடா பெங்களூரு ஹெப்பல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் பிரஜ்வல்வால் ரேவண்ணா வீடியோ வெளியானது தொடர்பாக தேவராஜ கவுடாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹரியூர் போலீசார் குலிஹால் கேட் என்ற பகுதியில் நேற்றிரவு வேதராஜகவுடாவை கைது செய்தனர். போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட தேவராஜ கவுடா கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஹோலேநரசிபுரா தொகுதியில் ரேவண்ணாவை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா டவுன் போலீஸ் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
    • ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு செய்துள்ளது.

    முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., பாலியல் புகாரில் சிக்கி உள்ளார். பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் தற்போது ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா, தேர்தல் முடிந்ததும் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். அவர் சென்ற பிறகுதான் அவரைப்பற்றிய ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா டவுன் போலீஸ் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவாகி உள்ளது. அதுபோல் பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டில் வேலை பார்த்த பெண்ணின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதே போலீஸ் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீதும், அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா மீதும் வழக்கு பதிவாகி இருக்கிறது. மேலும் ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களில் ஒருவர் கடத்தப்பட்டதாக அப்பெண்ணின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    அப்பெண்ணை எச்.டி.ரேவண்ணாவின் ஆட்கள் தான் கடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரேவண்ணா மீது ஆட்கடத்தல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    ×