search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஜாஜ் சிஎன்ஜி பைக்"

    • புளூ ப்ரின்ட் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • மோட்டார்சைக்கிளின் மத்தியில் இருக்கையின் கீழ் வழங்கப்படுகிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அடுத்த மாதம் தனது முதல் சி.என்.ஜி. பைக்கை அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய சி.என்.ஜி. பைக் தொடர்பாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், பஜாஜ் சி.என்.ஜி. பைக்கின் புளூ ப்ரின்ட் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    இதில் புதிய பைக்கின் சேசிஸ், சி.என்.ஜி. மற்றும் பெட்ரோல் டேன்க் மற்றும் ஒட்டுமொத்த தோற்றம் எப்படி இருக்கும் என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி பஜாஜ் சி.என்.ஜி. பைக் டபுள் கிராடில் ஃபிரேம் கொண்டிருக்கும் என்றும் சி.என்.ஜி. சிலிண்டரை பிடித்துக் கொள்ளும் பிடிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த யூனிட் மோட்டார்சைக்கிளின் மத்தியில் இருக்கையின் கீழ் வழங்கப்படுகிறது.

     


    சி.என்.ஜி. மற்றும் பெட்ரோல் டேன்க் என இரண்டையும் வைத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் பஜாஜ் சி.என்.ஜி. பைக்கில் ஸ்லோப்பர் என்ஜின் வழங்கப்படுகிறது. என்ஜினின் தலைப்பகுதி கீழ்புறமாக வைக்கப்பட்டு இருப்பதால், சி.என்.ஜி. டேன்க் வைக்க இடம் கிடைக்கிறது.

    சி.என்.ஜி. டேன்க்-ஐ வைத்து கொள்ள ஏதுவாக சேசிஸ்-இன் மெயின் ஃபிரேம் மற்றும் சப்-ஃபிரேம் இடையில் வட்ட வடிவம் கொண்ட பிடிப்புகள் வெல்டிங் செய்யப்படுகின்றன. என்ஜின், சி.என்.ஜி. சிலிண்டர் மற்றும் ஃபியூவல் டேன்க் உள்ளிட்டவைகளை பஜாஜ் நிறுவனம் எப்படி ஒருங்கிணைக்கும், பைக்கின் எடை எவ்வளவு இருக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    புதிய சி.என்.ஜி. பைக்கில் பஜாஜ் நிறுவனம் 125சிசி என்ஜின் வழங்கும் என்று தெரிகிறது. இந்தியாவின் முதல் சி.என்.ஜி. பைக் என்ற பெருமையை பெறுகிறது. அந்த வகையில், இந்த பைக் அதிக மைலேஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். 

    ×