என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுதீப் கிருஷ்ணா"
- பிரஸ்தானம் மற்றும் ஸ்னேக கீதம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார் சந்தீப் கிஷன்.
- கடந்த ஜனவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
பிரஸ்தானம் மற்றும் ஸ்னேக கீதம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார் சந்தீப் கிஷன். அதைதொடர்ந்து பல வெற்றி படங்களில் தெலுங்கு மொழியில் நடித்து. 2013 ஆம் ஆண்டு மதன்குமார் இயக்கத்தில் வெளியான யாருடா மகேஷ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
அதற்கு பின் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்களுக்கு பரீட்சையமான நடிகரானார். அதைத்தொடர்ந்து மாயவன், நெஞ்சில் துணிவிருந்தால், மைக்கல் போன்ற படங்களில் நடித்தார்.
கடந்த ஜனவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். அதைதொடர்ந்து தனுஷின் 50-வது திரைப்படமான ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
நேற்று சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு மாயாஒன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது அதைதொடர்ந்து இன்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் சிவி குமார் இயக்கி மற்றும் தயாரித்து 2017 ஆம் ஆண்டு வெளியான மாயவன் படத்தின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கத்து.
இப்படம் சைஃபை கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ராமபிரமம் சுன்கரா சார்பாக ஏ.கே எண்டர்டெயின்மண்ட்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. நெயில் நித்தின் முகேஷ் வில்லனாக நடித்து இருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைப்பெற்று வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.