என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடாபாவ்"

    • வடாபாவ் மும்பையில் மிகவும் பிரபலமானது
    • முதன்முறையாக வடாபாவ் சாப்பிட்ட கராமத்கான் அந்த உணவை பாராட்டினார்.

    மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் பிரபலமான நொறுக்கு தீனிகளில் ஒன்றாக வடாபாவ் திகழ்கிறது. குறிப்பாக தெருவோர உணவகங்களில் அதிகளவில் விற்பனையாகும் வடாபாவுக்கென்றே வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

    இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த கராமத்கான் என்ற இன்ஸ்டாகிராம் பயனர், கராச்சியில் உள்ள கண்டோன்மன்ட் ரெயில் நிலையம் அருகே கவிதா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் உணவு கடை தொடர்பாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், கவிதாவின் உணவகத்துக்கு சென்ற கராமத்கான் அந்த ஓட்டலில் வடாபாவ், பாவ் பாஜி, தால் சமோசா போன்ற உணவுப்பொருட்கள் சுவையாக இருப்பதாக கூறுகிறார்.

    கடையை நடத்தும் கவிதா கூறுகையில், வடாபாவ் மும்பையில் மிகவும் பிரபலமானது. இப்போது கராச்சியில் வசிப்பவர்களும் அதை விரும்புகிறார்கள் என கூறுகிறார். முதன்முறையாக வடாபாவ் சாப்பிட்ட கராமத்கான் அந்த உணவை பாராட்டினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ×