என் மலர்
நீங்கள் தேடியது "பனீர்"
- அனைவருக்கும் பனீர் பக்கோரா மிகவும் பிடிக்கும்.
- பனீரில் புரோட்டின்ஸ் அதிகம் உள்ளது.
நூடுல்ஸ் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் பனீர் சேர்த்து என்றால் விட்டு வைக்கவே மாட்டார்கள். பனீரில் புரோட்டின்ஸ் அதிகம் உள்ளது. பனீரையும், நூடுஸ்சையும் வைத்து பன்னீர் பக்கோரா செய்தால் அவ்வளவுதான் செய்த உடனேயே காலியாகிவிடும். அந்த அளவிற்கு அனைவருக்கும் இந்த டிஷ் மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
பனீர்- ஒரு கப் துருவியது
நூடுல்ஸ் - 2 பாக்கெட்டுகள்
கான்பிளார் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - கால் கப்
குடைமிளகாய் - 1
முட்டைக்கோஸ் - 1 கப்
பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சை கொத்தமல்லி - 2 தேக்கரண்டி
சீஸ் - அரை கப்
உப்பு - தேயான அளவு
செய்முறை
முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, நூடுல்ஸ் மசாலாப் பொருள்களைச் சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும். பின்னர் நூடுல்ஸ் வெந்ததும் எடுத்து தனியே வைக்க வேண்டும்.
நூடுல்ஸ் ஆறிய பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், குடைமிளகாய், பச்சை கொத்தமல்லி, மிளகாய் தூள், ரவை, பூண்டு விழுது, சீஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையை உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் உருண்டைகளுக்கு நடுவே விருப்பப்பட்டால் சீஸ் துண்டுகளையும் வைத்து மூடி வைக்கலாம்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை விட்டு பொறித்து எடுக்கலாம். இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி, கொத்தமல்லி சாஸுடன் பரிமாறவும்.
மிச்சம் வைக்காமல் அனைத்தும் உடனேயே காலியாகிவிடும்.

- பனீரில் கேசின் என்ற புரதம் மிக அதிகம்.
- பனீரில் கால்சியம் சத்தும் அதிகம்
பசும்பால் அல்லது எருமைப் பாலைக் காய்ச்சி, அதில் எலுமிச்சைப்பழச் சாறோ, வினிகரோ சேர்த்துத் திரியவைத்து பனீர் தயாரிக்கிறார்கள். இது சரியான முறைதான். இதில் எந்த பிரச்சனையும் இல்லை.

பாலைத் திரித்து பனீராக மாறியதும் அதை எவ்வளவு நேரத்துக்கு அழுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அது மிக மென்மையாகவோ, மிதமான மென்மைத்தன்மையுடனோ அல்லது கடினமாகவோ வரும்.
பனீர் புதரச்சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்தது. தவிர அது எந்த மாதிரியான பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் கொழுப்பு அளவும் வேறுபடும்.
சைவ உணவுக்காரர்களுக்கு பாலில் இருந்து பெறப்படும் பனீரின் மூலம் போதுமான புரதச்சத்து கிடைக்கும்.
பனீரில் கேசின் என்ற புரதம் மிக அதிகம். 100 கிராம் பனீரில் 12.4 கிராம் கார்போஹைட்ரேட் சத்து இருக்கும். பனீரில் கால்சியம் சத்தும் அதிகம் என்பதால் அதன் மூலம் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. பனீரில் பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சத்துகளும் இருக்கின்றன.

எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் பனீர் மிகச் சிறந்த உணவு. பனீரை கிரேவி, புலாவ், டிக்கா, புர்ஜி என விதம் விதமாகச் சமைக்க முடியும் என்பதால் குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் செய்து தந்து அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கும் பனீர் நல்லது. இத்தனை நல்ல குணங்களைக் கொண்டிருந்தாலும் பால் அலர்ஜி உள்ளவர்கள் மட்டும் பனீரை தவிர்ப்பது நல்லது.
- உணவு கலப்படத்தின் ஆபத்து அதிகரித்து வருவதால், நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
- பன்னீரின் அமைப்பு மற்றும் சுவையை வைத்தே அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும் கலப்படம் செய்யப்பட்ட மளிகைப் பொருட்கள் சந்தையில் விற்கப்படுவது பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம். பருப்பு வகைகள் முதல் மசாலாப் பொருட்கள் வரை எதுவும் பாதுகாப்பானது அல்ல, அவற்றை வாங்குவதற்கு முன் கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
அதேபோல தான் பனீர். இந்திய உணவு வகைகளில் பிரதானமான பனீர் அதன் மென்மையான மற்றும் கிரீமி சுவைக்காக விரும்பப்படுகிறது. இருப்பினும், உணவு கலப்படத்தின் ஆபத்து அதிகரித்து வருவதால், நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
நீங்கள் அடிக்கடி பேக் செய்யப்பட்ட அல்லது கடையில் விற்கப்படும் பனீர் வாங்குபவராக இருந்தால், அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க சில எளிய டிபஸ் இதோ...

1. பாலை திரைய வைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை பன்னீர் உறுதியான அமைப்பையும், பால் வாசனையையும் கொண்டிருக்கும். ஒரு பனீரின் அமைப்பு மற்றும் சுவையை வைத்தே அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
2. பேக் செய்யப்பட்ட பனீர்களுக்கு, லேபிள் அதன் நம்பகத்தன்மைக்கு ஒரு பெரிய அடையாளமாக இருக்கலாம். FSSAI குறி போன்ற தரச் சான்றிதழ்களை எப்போதும் சரிபார்க்கவும். தயாரிப்பு தூய பாலில் இருந்து தயாரிக்கப்படவில்லை என்றால் உற்பத்தியாளர்கள் காட்ட வேண்டிய "சாயல்" (imitation) அல்லது "அனலாக்" (analogue) போன்ற குறிப்பிட்ட சொற்களை இருக்கிறதா என்பதை பாருங்கள்.
3. ஒரு சிறிய துண்டு பனீர் உலர்ந்த பாத்திரத்தில் சூடாக்கவும். உண்மையான பனீர் சிறிது பழுப்பு நிறமாகி, பாத்திரத்தில் நொறுங்கலாம், அதே நேரத்தில் போலி பனீர் சீரற்ற முறையில் உருகலாம், அதிகப்படியான தண்ணீரை வெளியிடலாம் அல்லது எண்ணெயாகவும் தோன்றலாம். இந்த எளிய சோதனை பனீரின் தரத்தை உறுதிப்படுத்த உதவும்.

4. பனீரின் நம்பகத்தன்மையை சோதிக்க மற்றொரு வழி, அதில் ஸ்டார்ச் உள்ளதா இல்லையா என்பதை அறிய அயோடின் சோதனையைச் செய்வதாகும். ஒரு துண்டு பனீரை வேகவைத்து, அதை ஆறவிடுங்கள், பின்னர் தண்ணீரில் சில துளிகள் அயோடின் டிஞ்சரைச் சேர்க்கவும். கரைசல் நீல நிறமாக மாறுவதை நீங்கள் கண்டால், அது உங்கள் கடையில் வாங்கிய பனீரில் ஸ்டார்ச் இருப்பதைக் காட்டுகிறது.
5. இந்த சோதனைக்கு, பனீரை தண்ணீரில் கொதிக்க வைத்து, குளிர்வித்து, பின்னர் சிறிது துவரம் பருப்பு பொடியை பனீரின் மீது தெளிக்க வேண்டும். அதை 10 நிமிடங்கள் அப்படியே விடவும். பனீரின் நிறம் வெளிர் சிவப்பாக மாறினால், அது பெரும்பாலும் சோப்பு அல்லது யூரியா போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களால் தயாரிக்கப்பட்டவை.