என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழ்க்கடவுள் முருகன்"
- தங்களின் கோரிக்கைகள் நிறைவேறியவுடன் நேர்த்திக் கடனாக முருகனுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள்.
- ஒரே திருப்புகழ் மூலம் 5 பலன்களைத் தரும் கோவில் என்ற பெருமை சிறுவாபுரி தலத்துக்கு உண்டு.
01. செவ்வாய்க்கிழமை கூட்டம் அதிகமாக இருப்பதால் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் கோவில் ராஜ கோபுரம் முன்பு விளக்கேற்றி வழிபட்டு செல்வார்கள்.
02. தங்களின் கோரிக்கைகள் நிறைவேறியவுடன் நேர்த்திக் கடனாக முருகனுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள்.
03. இங்கு முருகனை பாலனாகவும், வள்ளியோடு திருமணம் புரிந்து கொள்ளும் மணக்கோலத்திலும் இரு வேறு நிலைகளில் காண முடிகிறது.
04.ஆரம்ப காலத்தில் முருகனும் மரகதக்கல்லாலேயே வடிக்கப்பட்டிருந்தார் எனவும், பிற்காலத்தில் வேறு சிலை நிறுவப்பட்டிருக்க வேண்டும் எனவும் கருதப்படுகிறது.
05. முருகனுக்கு வலதுபக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் வள்ளியும் முருகப்பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய திருக்கோலத்தினை காண்பது அரிது.
06. பலி பீடத்தின் அடியில் உப்பு, மிளகு போட்டு, பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.
07. சிறுவாபுரி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை சிறப்பு அபிஷேகம் மிகவும் விசேஷமானது.
08. அண்டர்பதி குடியேற என்ற திருப்புகழ் வேண்டுவன தரும் திருப்புகழ். சொந்த வீடு வேண்டும் என்று விரும்பும் பக்தர்கள் இதை பாடுகிறார்கள். வீடு, தொழில், திருமணம் செல்வம், மோட்சம் என்று அனைத்தையும் தரும் திருப்புகழ் இது.
09. ஒரே திருப்புகழ் மூலம் 5 பலன்களைத் தரும் கோவில் என்ற பெருமை சிறுவாபுரி தலத்துக்கு உண்டு.
10. வேண்டுதல் வேண்டியபடி சீக்கிரமாகவே நிறைவேறி விடும்.
11. கோவில் முன்பு ஓட்டல்கள், டீக்கடைகள், குளிர்பான கடைகள் உள்ளன.
12. சென்னையில் இருந்து செங்குன்றம், காரனோடை வழியாகவும், மீஞ்சூர், பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம்.
13. இங்கு முருகனை வணங்க செவ்வாய்க்கிழமை சிறப்பான நாளாக கருதப்படுகிறது.
14. கோவில் சிறிய அளவில் இருந்தாலும் பல நூற்றாண்டு பழமையானது.
15. பக்தர்கள் அனைவருக்கும் திருநீறு பிரசாதம் கவரிலேயே வழங்கப்படுகிறது.
16. பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதால் இங்கு அமர்ந்துள்ள முருகப்பெருமான் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார்.
17. லவ-குசா இருவரும் சிவ பெருமானையும், முருகனையும் இங்கு வழிபட்டு உள்ளனர். ராமாயண காலத்தில் ராமருக்கும், லவ-குசனுக்கும் போர் நடந்த இடம் இது என்று கூறப்படுகிறது.
18. வள்ளியுடன் திருமண ேஜாடியாக முருகன் இங்கு வந்து தங்கியதால் திருமணம் ஆகாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால் தடைபட்ட திருமணம் நடக்கும்.
19. கோவில் அமைந்துள்ள ஊர் சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென்சிறுவாபுரி, குசலபுரி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
20. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் சாக்லேட்டுகளை பிரசாதமாக வழங்குகின்றனர்.
- சிறுவாபுரி கோவிலுக்கு வரும் சில பக்தர்கள் அங்குள்ள கம்பியிலான கூண்டில் பூட்டு போட்டு செல்கிறார்கள்.
- இதற்கு ஒரு கதை இருப்பதாக ஊர் பெரியவர்கள் சொல்கிறார்கள்.
சிறுவாபுரி கோவிலுக்கு வரும் சில பக்தர்கள் அங்குள்ள கம்பியிலான கூண்டில் பூட்டு போட்டு செல்கிறார்கள்.
இதற்கு ஒரு கதை இருப்பதாக ஊர் பெரியவர்கள் சொல்கிறார்கள்.
ஆண்டாண்டு காலமாக நம் நாட்டில் மாமியார்-மருமகள் சண்டை ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
இதில் சிக்கி தவிக்கும் மாமியார்கள், மருமகள்கள் வாயை அடைக்கும் வகையிலும் மருமகள்கள் இனிமேல் மாமியார்கள் சண்டைக்கே வராமல் அடங்கி போகும் வகையிலும் ஒருவருக்கொருவர் இங்கு பூட்டுகளை போட்டு பூட்டி செல்கின்றனர்.
பின்னர் அந்த சாவிகளை அவர்கள் ேகாவில் உண்டியலிலோ அல்லது அங்குள்ள திருக்குளத்திலோ வீசி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதுபற்றி கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறும்போது, "எதற்காக பக்தர்கள் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. கேட்டால் பிரார்த்தனையை வெளியில் சொல்லக் கூடாது என கூறி நழுவி விடுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
- புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன.
- தந்தைக்கு “ஓம்” என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.
தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் விரும்பி வணங்கிப் போற்றப்படும் தெய்வம் முருகன்.
கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் என விளங்கி அடியார்களுக்கெல்லாம் முருகன் அருள் செய்து வருகின்றான்.
முருகன் என்றதுமே மக்களின் உள்ளமெல்லாம் உருகும். முருகன் பால் மக்களுக்கு எல்லையில்லாத பக்தி உண்டு.
தமிழ்நாட்டில் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் பெரும்பாலும் முருகனுக்கு கோவில்கள் அமைத்திருக்கின்றனர்.
முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி முதலிய சிறப்பு நாட்களில், லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டு மகிழ்கிறார்கள்.
முருகன் கோவில்கள் எல்லாம் சிறந்த பிரார்த்தனை தலங்களாக விளங்குகின்றன.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் முருகன் கோவில்களில் பெருந்திரளாக கூடி வணங்கி மகிழ்கிறார்கள்.
இன்றைக்கு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் எனும் பண்டைப் பெருந்தமிழ் நூலிலும், முருகன் வழிபாடு பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.
மேலும் சங்ககால புலவர் பெருமான், முருகனை பற்றி திருமுருகாற்றுப்படை என்னும் துதிநூலை பாடியிருக்கின்றார்.
அதன் மூலம் ஆறு திருத்தலங்கள் முருகனின் ஆறுபடை வீடுகள் என்ற சிறப்பு பெற்றுள்ளன.
சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்பிரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன், சண்முகன் போன்ற பல பெயர்களால் முருகன் வழங்கப்படுகிறார்.
புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன.
தந்தைக்கு "ஓம்" என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.
ஓம் என்பது அ,உ,ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.
அ-படைத்தல், உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.
அ,உ,ம, என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துக்களுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது.
முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ,உ,ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவானவன்.
முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்த தாகவும் கூறப்படுகிறது.
முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது.
வளம் மிகுந்த வாழ்வு அமைய வரம் மிகுந்த சிறுவை முருகனை வழிபட வாருங்கள்!
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்