search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெதர் மேன்"

    • தமிழகத்தில் வானிலை குறித்து துல்லியமாக கணிப்புகளை கூறுபவராக அறியப்படுபவர் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
    • நாளை முதல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வெதர் மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழகத்தில் வானிலை குறித்து துல்லியமாக கணிப்புகளை கூறுபவராக அறியப்படுபவர் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான். இவர் தமிழகத்தின் வெதர் மேன் என்றே மக்கள் மத்தியில் அழைக்கப்படுகிறார். முந்தய காலங்களில் மழை, வெள்ளம் குறித்த இவரின் கணிப்புகள் அப்படியே நடந்துள்ளது. வானிலை தொடர்பான தகவல்களுக்கு வானிலை மையத்தின் அறிக்கைக்கு அடுத்தபடியாக இவரின் அறிக்கையையும் கருத்தில் கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    அதன்படி நாளை முதல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வெதர் மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சென்னையில் மழை பெய்யும், நாளை (மே 16) வியாழக்கிழமை ரெயின் கோட் எடுத்துட்டு போக மறந்துராதீங்க என்று தெரிவித்துள்ளார்.

    சென்னை வானிலை மைய அறிக்கைபடி நாளை (மே 16) தமிழகத்தில் அநேக இடங்களில் மற்றும் மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் , சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக இன்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கியதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

    ×