search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்வாதி மலிவால்"

    • ஸ்வாதி மலிவாலின் இல்லத்துக்கு சென்ற காவல்துறை உயர் அதிகாரிகள் குழு அவரிடம் இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெற்றனர்.
    • நாளை (ஏப்ரல் 17) காலை 11 மணிக்கு பிபவ் குமார் தேசிய மகளிர் ஆணையம் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன் மீது தாக்குதல் நடத்தியதாக கெஜ்ரிவாலின் இல்லத்தில் இருந்து ஆம் ஆத்மி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் போன் மூலம் டெல்லி போலீசிடம் கடந்த மே 13 அன்று காலை முறையிட்டார். ஆனால் கெஜ்ரிவாலின் இல்லத்துக்கு போலீஸ் விரைந்த போது அங்கு ஸ்வாதி மலிவால் காணப்படவில்லை. அவரின் குற்றச்சாட்டு குறித்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.

    ஸ்வாதி தாக்கப்பட்டது உண்மைதான் என ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் ராவத் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். மேலும் பிபவ் குமார் மீது கெஜ்ரிவால் கடும் நடவடிக்கை எடுப்பார் எனவும் உறுதியளித்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் இந்திய மகளிர் ஆணையம், உடனே விசாரணை  அறிக்கை சமர்ப்பிக்க டெல்லி காவல் துறையை வலியுறுத்தியிருந்தது.

    ஆனால் இதுவரை டெல்லி காவத்துறைக்கு இந்த சம்பவம் குறித்த எழுத்துபூர்வமான புகார் அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று (மே 16) ஸ்வாதி மலிவாலின் இல்லத்துக்கு சென்ற காவல்துறை உயர் அதிகாரிகள் குழு அவரிடம் இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெற்றனர். சுமார் 4 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெற்ற பின் பேசிய அதிகாரிகள், இந்த குற்றச்சாட்டின் மீது விரைவில் எப்ஐஆர் பதியப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

     

    இதனிடையே நாளை (ஏப்ரல் 17) காலை 11 மணிக்கு பிபவ் குமார் தேசிய மகளிர் ஆணையம் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது  

    ×