search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேன்ஸ் திரைபட விழா"

    இந்திய சினிமாவில் அழிக்கமுடியாத தடத்தைப் பதித்தவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். ஹிந்தி, பெங்காலி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கிறங்கடிக்க செய்து வருகிறார். ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனை கடந்த 2007 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற  12  வயது மகள் உள்ளார்.

    இந்நிலையில் பிரான்சில் கடந்த மே 14 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்துவரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக ஐஸ்வர்யா ராய் பிரான்ஸ் சென்றுள்ளார். இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் இருந்து வரும் நடிகர், நடிகைகள் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் உடைகளை அணிந்து, சிவப்பு கமபலத்தில் நடந்து வந்து தங்களை வெளிப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் ஐஸ்வர்யா ராய் சிவப்பு கம்பளத்தில் மகள் ஆராத்யாவுடன் தோன்றிய புகைப்படங்கள் தற்போது தீயாக பரவி வருகிறது.

    அதற்கு முக்கிய காரணம் தனது வலது கையில் காயத்துக்காக மாவுக் கட்டு போட்டுகொண்டு அதோடு அவர் அங்கு தோன்றியதே ஆகும். காயத்தையும் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதற்காக ஐஸ்வர்யா ராயை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஸ்டைல் என்பது நாம் உருவாக்குவதே ஆகும்.

     

    அதன்படி, கையில் கட்டுடன் தோன்றி அதையும் ஒரு ஸ்டைலாக ஐஸ்வர்யா ராய் மாற்றியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பூரிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கடைசியாக ஐஸ்வர்யா ராய் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 1 மாற்றும் 2 ஆம் பாகத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×